'கொரோனாவை விரட்டும் மூலிகை டீ...' 'இந்த மாவட்டத்துல நெறைய பேர் குணம் ஆயிட்டு வராங்க...' ஆங்கில மருத்துவ சிகிச்சையோடு மூலிகை டீ குடிக்கிறப்போ நல்ல பலன்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிவகங்கை மாவட்டத்தில் மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துகளோடு மூலிகை டீயையும் கொடுத்து கொரோனா நோயாளிகளை சில நாட்களிலேயே பாதிப்பிலிருந்து மீட்கின்றனர்.

கொரோனா வைரஸ் பரவியது முதல் இரண்டு இலக்கங்களில் இருந்து வருகிறது சிவகங்கை மாவட்டம். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை காட்டிலும் குணமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரிப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, மருத்துவமனைகளில் ஆங்கில மருந்துகளுடன் மூலிகை டீயும் கொடுக்கப்படுவதே ஆகும். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனின் அனுமதியோடு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையோடு, காலை, மாலை 'வாதம் பித்தம் கபம் விஷசுரம் டீ' என்ற மூலிகை டீ வழங்கப்பட்டு வருகிறது. சிவகங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்படைந்தவர்கள் சுமார் 5 முதல் 7 நாட்களில் குணமடைந்து வருகின்றனர்.

இந்த ஆரோக்கியமிக்க மூலிகை டீயை காரைக்குடி ஆவுடைப்பொய்கையைச் சேர்ந்த மூலிகை மருத்துவரான சி.சொக்கலிங்கம் என்பவர் வழங்கி வருகிறார்.

இதுகுறித்து மருத்துவரான சி.சொக்கலிங்கம் அவர்கள் கூறும் போது, இந்த மூலிகை டீயில் ஏலம், போய்புடல், கண்டங்கத்தரி, அதிமதுரம், ஆடாதொடை, சுக்கு, வால்மிளகு, மஞ்சள், திப்பிளி, கிராம்பு, துளசி உள்ளிட்ட 27 மூலிகைகள் சேர்க்கப்படுவதாகவும், மூலிகை டீயில் சேர்க்கப்படும் அனைத்தும் உணவுப்பொருட்கள் என்பதால் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வாதம் பித்தம் கபம் விஷசுரம் டீயை கரோனா பாதித்தோர் மட்டுமல்லாமல் அனைவரும் காலை, மாலை இருவேளையும் குடிக்கலாம் என்று தெரிவித்துள்ள அவர், கொரோனா நோயாளிகள் காலை மாலை என இரு வேளையும் சுமார் 50 மி.லி. மூலிகை மருந்தையும், சாதாரண மக்கள் 25 மி.லி-ம், குழந்தைகள் 10 முதல் 15 மி.லி-ம் குடிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில் "கொரோனா சிகிச்சைக்கு ஆங்கில மருந்துகளோடு, மூலிகை டீயும் சேர்த்து கொடுக்கும்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. இதனால் 'மூலிகை டீ' தொடர்ந்து கொடுக்க சொல்லியுள்ளேன்,’ என்று கூறினார்., ஓரிரு தினங்களில் பொடியாக தயாரித்து அனைத்து மாவட்டங்களிலும் வழங்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்