கொரோனா: ‘அன்றாட தொழிலாளர்களுக்காக’.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செய்த ‘நெகிழ வைக்கும்’ செயல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியா உட்பட உலக நாடுகளை மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தி வருகிறது கொரோனா என்னும் கொடிய வைரஸ் நோய். இந்தியாவைப் பொருத்தவரை 270 பேருக்கு கிட்டத்தட்ட கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5 பேர் இந்தியாவில் கொரோனாவுக்காக பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவிர மார்ச் 22ஆம் தேதி (ஞாயிறு) ஜனதா ஊரடங்கு உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்துள்ளார். இதன் காரணமாக அனைத்து வணிக நோக்கிலான கடைகளும், பொதுப் போக்குவரத்து அம்சங்களான ரயில்கள் மற்றும் பேருந்துகளும் நாளை இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அன்றாட விநியோகத்தினால் மட்டுமே வருமானத்தைப் பெறும் சிறு குறு தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் (unorganized sector labourers) வருமானம் இன்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இவர்களின் நலனுக்காக தனது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்.
இதன் நிமித்தமாக தமிழக அரசை அரசின் தலைமைச் செயலாளர் சண்முகத்தை நேரில் சந்தித்து தனது ஒரு மாத ஊதியம் ரூ.2.5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அளித்ததோடு, ஒருவனா பாதிப்புக்குள்ளாகும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிரந்தர ஊதியம் பெறுபவர்கள் செய்ய உதவி செய்ய வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பதில் சொல்லுங்கள்’.. ‘தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு தேர்வுகளை தள்ளிவைப்பது குறித்து’... ‘தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு’!
- கொஞ்சம் கூட 'சுத்தம்' இல்ல, 'கைகழுவ' தண்ணி இல்ல... மொதல்ல 'அதை' இழுத்து மூடுங்க... ஐகோர்ட்டில் வழக்குத்தொடர்ந்த நபர்!
- இனி ‘மதுபோதையில்’ வாகனம் ஓட்டினால் ‘கைது’... ‘சென்னை’ உயர்நீதிமன்றம் ‘அதிரடி’ உத்தரவு... ‘விவரங்கள்’ உள்ளே...
- 'கைய நல்லா கழுவ சொல்றீங்க'... 'சென்னையில தண்ணீருக்கு எங்க போவோம்'?... ஐகோர்ட்டில் வழக்கு!
- 'ரசிகர்கள்ல யாருக்காவது கொரோனா தொற்று இருந்தா என்ன பண்ணுவீங்க!?'... ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரி வழக்கு!... என்ன செய்யப்போகிறது இந்திய கிரிக்கெட் வாரியம்?
- ‘ஐபிஎல் போட்டிக்கு தடை விதிக்கணும்’... ‘சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு’!
- ‘நடிகர் ரஜினிகாந்துக்கு எதிரான’... ‘வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு வாபஸ்’... ‘சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி’!
- “அடுத்த அதிரடி உத்தரவு!”.. “சோஷியல் மீடியாவில் இத பண்றவங்க லிஸ்டை உடனே ரெடி பண்ணுங்க!”
- ‘அவர் பேசுனது எல்லாம்’... ‘எச்சரிக்கை விடுத்த’... ‘சென்னை உயர்நீதிமன்றம்’... !
- ஷாக் ரிப்போர்ட்... மருந்துகளை 'அதிக' விலைக்கு விற்க... மருத்துவர்களுக்கு 'அனுப்பப்படும்' இளம்பெண்கள்!