'தொடங்கியது கொரோனா நிவாரணம்'...'தினமும் எத்தனை பேருக்கு'...'ரூ.1000 கூட என்னெல்லாம் இருக்கு'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக 1000 ரூபாயுடன், ரேஷன் பொருட்கள் இலவசமாக கொடுக்கும் திட்டம் இன்று முதல் தொடங்கியது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் வகையில் அனைத்து அரிசி ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.1,000 நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் நிவாரணத் தொகை 1000 ரூபாயுடன், ரேசன் பொருட்கள் வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கியது. ரேசன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் தெரு வாரியாக பிரிக்கப்பட்டு, டோக்கன் வழங்கப்பட்டு இந்த பொருட்கள் வழங்கப்படுகின்றன. 1000 ரூபாயுடன் மக்ககளின் அன்றாட தேவையான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவையும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதற்கிடையே கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும், பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காகவும் தினமும் 70 முதல் 100 ரேஷன் அட்டைகளுக்கே ரூ.1,000 மற்றும் பொருட்கள் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக அரசு ரூ.1,882 கோடியே 90 லட்சத்து 73 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ரயில், விமானங்களில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்’... ‘ஆனால், இதிலிருந்து மட்டும் தான் புக் செய்ய முடியும்’... வெளியான தகவல்!
- 'மனிதர்களை கொன்ற கொரோனாவால்... மனிதத்தை கொல்ல முடியவில்லை!'... 7 வயது சிறுவன் முதல் 82 வயது மூதாட்டி வரை... கொரோனா தடுப்பு பணிகளுக்கு... அள்ளி வழங்கும் நெஞ்சங்கள்!
- 'நான் நல்ல வாழ்க்கையை வாழ்ந்துட்டேன்'... 'எனக்கு வேணாம் அவங்களுக்கு கொடுங்க'... 'மரணத்திற்கு' முன் 'மூதாட்டி' செய்த 'கலங்கவைக்கும்' காரியம்...
- 'சிலிண்டர்' லாரி மீது 'மோதிய' வேகத்தில்... அடியில் 'சிக்கிய' கார்... முன்பகுதி 'தீப்பிடித்து' கோர விபத்து...
- போற போக்குல... மதுரை 'மல்லி'யையும் விட்டு வைக்கல...மொத்தமா 'ஆப்பு' வச்சுருச்சு!
- உலகம் முழுவதும் 'பொருளாதார' மந்தம் ஏற்படும்... இந்த 2 நாடுகள் மட்டும் 'எஸ்கேப்' ஆக வாய்ப்பு இருக்காம்... செம ஷாக்!
- சென்னையின் 'பிரபல' மால்... மூடப்படுவதற்கு முன் 'அங்கு' சென்றவர்கள்... சுகாதாரத்துறை எச்சரிக்கை!
- ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனை வாங்கிபார்த்த செவிலியருக்கு நேர்ந்த கதி?’.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
- ‘என் அப்பா ஒரு போலீஸ்’.. ‘உங்களுக்காகதான் எங்கள பிரிஞ்சு அவர் இருக்காரு’.. ‘தயவுசெஞ்சு நீங்க...!’.. மகளின் உருக்கமான பதிவு..!
- ‘காய்ச்சல், இருமல் இருக்கானு’... ‘கொரோனா ஆய்வுக்கு சென்ற சுகாதார ஊழியர்களுக்கு’... ‘வாணியம்பாடி மக்களால் நடந்த பரபரப்பு’!