'குறையும் இரண்டாம் அலையின் தாக்கம்'... 'ஆனா 4 மாவட்டங்களில் அதிகரிக்கும் தொற்று'... 'காரணம் என்ன'?... ராதாகிருஷ்ணன் விளக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு தெருத்தெருவாக சென்று கூறியும் சிலர் முன்வருவதில்லை என ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழக அரசு கொரோனா தொற்று அதிகரிக்காமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. என்றாலும் சில மாவட்டங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவதால் கொரோனா தொற்று அதிகரிக்கிறது. தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் 300 பேர் கூடிய கூட்டத்தில் 24 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. அதில் ஒருவர் மரணம் அடைந்தார். பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரு தெருவாகச் சென்று விழிப்புணர்வு பிரசாரம் ஏற்படுத்தப்படுகிறது. என்றாலும் சிலர் முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்வதில்லை.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அலட்சியமாகச் செயல்பட்டால் கொரோனா பரவும் ஆபத்து ஏற்படும். எனவே பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி, அடிக்கடி கை கழுவுதல் போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும், என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்  கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்