‘கொரோனா பயத்தால்’... ‘தயங்கி நின்ற சுகாதார ஊழியர்கள்’... ‘துணிச்சலாக களத்தில் இறங்கிய எம்.எல்.ஏ. ரோஜா’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா அச்சத்தால் சுகாதார ஊழியர்கள் செய்ய தயங்க வேலையை, சட்டமன்ற உறுப்பினரும், நடிகையுமான ரோஜா கையில் எடுத்து செய்த சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம் நகரி தொகுதிக்குட்பட்ட வடமாலை பகுதியில் புதிதாக ஒருவருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்க நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா அச்சத்தால் சுகாதார ஊழிர்கள் வீட்டுக்கு வெளியே கிருமி நாசினி தெளிக்க செல்லாமல் தயங்கி நின்றனர்.
இதனை கவனித்த அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரோஜா பாதுகாப்பு கவச உடைகளை ஊழியர்களுக்கு அணிவித்தார். பின்னர் தானும் அணிந்து கொண்டு வீடு வீடாகச் சென்று கிருமி நாசினி தெளித்தார். அவர் முன்னோடியாக செயல்பட்டு களத்தில் இறங்கியதை அடுத்து, அதன்பின் சுகாதார ஊழியர்களும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் பேசிய அவர், 'அனைவரும் பாதுகாப்பாக இந்த நேரத்தில் இருக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஊரே ஊரடங்கில் இருக்கு'...'ச்சே பார்க்கில் இளம் ஜோடி'...'பட்டப்பகலில் பரபரப்பு'...கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்!
- 'கொரோனா வந்துரும், body'ய கொண்டு போங்க'...'சடலத்தோடு சுற்றிய அதிகாரிகள்'... சென்னையில் தொடரும் சோகம்!
- பலி எண்ணிக்கை அதிகரிப்பால்... 'பிணப்பைகளுக்கு' கடும் தட்டுப்பாடு... 'ஆம்புலன்ஸ்' டிரைவர்கள் கடும் அச்சம்!
- 'இல்லங்களில்' இருந்தே மருந்துகளை பெற...' இலவச' எண் தொடக்கம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
- கொரோனாவுக்கு 'தீர்வு' கண்ட பெண் விஞ்ஞானியை... மிரட்டி 'பணிய' வைத்ததா சீனா?... வெளியான 'புதிய' தகவல்!
- 'பிளாஸ்டிக் பைகளில் எச்சில் துப்பி'.. 'வீடுகளுக்குள் எறிந்து செல்லும் பெண்'!.. 'வெளியான சிசிடிவி காட்சிகள்'!
- ‘திரும்பவும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு’... ‘சீனா எடுத்த அதிரடி நடவடிக்கை’!
- இந்தியாவின் 'நுழைவாயில்' நகரத்தில்... கொரோனாவால் 'உயிரிழந்தவர்களின்' எண்ணிக்கை... 100 ஆக உயர்வு!
- "அமெரிக்காவுக்கு வர விருப்பமில்லை..." "இந்தியாதான் எங்களுக்கு சேஃப்..." 'அமெரிக்கா' செல்ல மறுக்கும் '24 ஆயிரம் அமெரிக்கர்கள்...'
- 'இது' இல்லாம 'வெளியே' வராதீங்க... மீறுனா 'நடவடிக்கை' எடுப்போம்: சென்னை மாநகராட்சி