ஒரே மாவட்டத்தில் இன்று '107 பேருக்கு' கொரோனா... 'கோயம்பேடு' மார்க்கெட் மூலம் தொடர்ந்து 'உயரும்' பாதிப்பு...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து கடலூர் சென்ற 107 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து பிற மாவட்டங்களுக்கு சென்றவர்களால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், கோயம்பேட்டிலிருந்து கடலூர் சென்ற 107 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்முலம் கடலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இதுவரை கடலூரில் 699 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும்நிலையில்,  தனிமைப்படுத்தப்பட்ட அனைவரும் கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்புடையவர்கள் எனவும், கடலூரில் கிராமங்கள் தோறும் குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். அத்துடன் இதுவரை கோயம்பேடு மார்க்கெட் மூலமாக கடலூரில் 129 பேர், விழுப்புரத்தில் 76 பேர், சென்னையில் 63 பேர், அரியலூரில் 42 பேர், காஞ்சிபுரத்தில் 7 பேர் மற்றும் பெரம்பலூர், தஞ்சாவூர் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்