'தமிழகத்தின் ஒரே பச்சை மண்டலத்திலும்...' 'உள்ளே நுழைந்தது கொரோனா...' '5 பகுதிகளுக்கு லாக்டவுன்...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்கிருஷ்ணகிரி கொரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத ஒரே மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்து வந்தது. இந்நிலையில் கிருஷ்ணகிரி வேப்பனஹள்ளி அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் பையனபள்ளிப் பகுதியைச் சேர்ந்த 67 வயது முதியவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
நல்லூர் பகுதியைச் சேர்ந்த முதியவர் உட்பட ஐந்து பேர் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி சாய்பாபா கோவிலில் கடந்த இரண்டு மாதங்களாக சேவை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்கள் 5 பேரும் கடந்த 25-ஆம் தேதி ஆந்திர மாநிலத்திலிருந்து சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர்.
மாநில எல்லையான நல்லூர் பகுதியில் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், 5 பேரையும் வீட்டில் தனிமைப்படுத்தினர். பின்னர் 28ம் தேதி சுகாதாரத்துறை சார்பில் அவர்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
அதில் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 67 வயது முதியவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அந்த நபர் சேலம் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் இவருடன் ஆந்திராவில் இருந்து வந்த நான்கு பேரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். மேலும் இவர்களது உறவினர்கள் எட்டு பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.
தொடர்ந்து இவர்கள் வசிக்கக்கூடிய கிருஷ்ணகிரி பாலாஜி நகர், நல்லதம்பிசெட்டி தெரு, காவேரிப்பட்டினம், சண்முகம் செட்டி தெரு, பழையபேட்டை உள்ளிட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்க படுவதுடன் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பச்சை மண்டலத்தில் இருந்த ஒரே மாவட்டமான கிருஷ்ணகிரியிலும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் மட்டும் ஏன் கொரோனா பாதிப்பு அதிகம்..? அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்ன விளக்கம்..!
- ஒருவேளை ‘சாப்பாட்டுக்காக’ 4கிமீ வெயிலில் காத்திருந்த மக்கள்.. ‘இந்த நாட்டுக்கு இப்டியொரு சோதனையா’!.. கலங்க வைத்த ட்ரோன் வீடியோ..!
- 'என்ன' நடந்தாலும் 'நிச்சயம் பண்ணிய' பெண்ணை 'கல்யாணம்' பண்ணியே 'தீருவேன்'!.. கொரோனா லாக்டவுனால் மாப்பிள்ளை எடுத்த அதிரடி முடிவு!'
- நாடு முழுவதும் 'பச்சை' மண்டல பட்டியலை 'வெளியிட்ட' மத்திய அரசு... 'தமிழகத்தின்' நிலை என்ன?
- 'மே 4-ஆம் தேதி முதல் லாக்டவுன் நீட்டிப்பு!'.. 'இங்கெல்லாம் பேருந்துகள் இயங்கும்!'.. 'தனியார் நிறுவனங்கள் 33% ஊழியர்களுடன் இயங்கலாம்!'.. ''மேலும் பல விபரங்கள் உள்ளே!'
- தமிழகத்தில் 'இன்று(மே 2)' அதிகபட்சமாக 231 பேருக்கு 'கொரோனா'!.. 'சென்னையில்' மட்டும் 1000த்தை 'தாண்டியது'! மொத்த எண்ணிக்கை 2757 ஆக உயர்வு!
- 'ஒரே தெருவில் 19 பேருக்கு கொரோனா'... 'அதிர்ச்சியில் மக்கள்'... சென்னையில் அமலுக்கு வரும் கடும் விதிமுறைகள்!
- 'நம்ம சென்னைக்கு என்ன ஆச்சு'... 'எகிறிக்கொண்டே போகும் எண்ணிக்கை'... அதிர்ச்சி அளிக்கும் தகவல்!
- "பிரேதத்தை எடுத்துடுவாங்க.. நைட்டே போகணும் சார்!".. 'லாக்டவுனில்' தம்பதியரின் 'கோரிக்கை'!.. 'நெகிழவைத்த' காவலர்!
- ‘அத’ பண்றதுக்காக ‘சீனா’ எதை வேணாலும் செய்யும்.. அடுத்த புது குற்றசாட்டை தூக்கிப்போட்ட டிரம்ப்..!