'வஞ்சிரம் மீன்' வாங்க 'பேங்க்'ல லோன் எடுக்கணும் போல'... 'கொரோனா'வால் விண்ணுக்கு பறந்த விலை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா, மற்றும் பறவை காய்ச்சலின் அச்சத்தின் காரணமாக வஞ்சிரம் மீனின் விலை விண்ணை தொட்டுள்ளது. இந்த விலை ஏற்றம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் தாக்கம் தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. இது ஒரு புறம் என்றால், கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சல் பொதுமக்களை  இன்னும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இதில் சோகம் என்றவென்றால் நோய் பரவுவதை விட நோய் குறித்த வதந்திகள் அதிக அளவு சமூகவலைத்தளங்கள் மூலமாக வேகமாக பரவுகிறது.

அதில் முக்கியமாக  கோழி இறைச்சியை யாரும் சாப்பிட வேண்டாம் எனவும், அதன் மூலமாக இதுபோன்ற நோய்கள் வேகமாக பரவுவதாகவும் வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.  இதனால் மக்கள் கோழி இறைச்சி வாங்க தயக்கம் காட்டி வரு கின்றனர். அதற்கு பதிலாக மீன், ஆட்டிறைச்சியை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் கோவையில் மீன், ஆட்டிறைச்சி விலை உயர்ந்து உள்ளன.

இதன்படி கடந்த வாரம் கிலோ ரூ.700 முதல் ரூ.800 -க்கு விற்ற வஞ்சிரம் மீன் (பெரியது) தற்போது ரூ.900 முதல் ரூ.1,000-க்கும் விற்பனையாகிறது. மத்தி ரூ.120 (ரூ.100), இறால் ரூ.450 (ரூ.350), நெத்திலி ரூ.220 (ரூ.180), பாறை ரூ.350 (ரூ.250), ஊளி ரூ.300 (ரூ.200), வாவல் ரூ.650 (ரூ.450)-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து மீன் வியாபாரிகள் கூறும் போது, ''இந்த மாத தொடக்கத்தில் மீன் வரத்து அதிகமாக இருந்ததால் மீன்விலை கொஞ்சம் குறைந்தது.

தற்போது கொரோனா, கேரளாவில் தோன்றிய பறவை காய்ச்சல் காரணமாக மீன் வகைகளை மக்கள் அதிகம் வாங்கி செல்கின்றனர். மீன் நுகர்வு அதிகரித்ததால் மீன்களின் விலை உயர்ந்து உள்ளது என்றனர். இது போல் கொரோனா, பறவை காய்ச்சல் பீதி காரணமாக கோவையில் ஆட்டிறைச்சி விலையும் உயர்ந்து உள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.640 முதல் ரூ.660 வரை விற்பனை செய்யப்பட்ட ஆட்டிறைச்சி தற்போது ரூ.700 முதல் ரூ.720 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வு மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VANJARAM FISH, CORONA, BIRD FLU, PANIC, COIMBATORE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்