‘திருச்சியில் கொரோனா சிகிச்சையில் இருந்த இளைஞர் குணமடைந்தார்’.. மகிழ்ச்சியுடன் சொந்த ஊருக்கு அனுப்பிய மருத்துவர்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருச்சியில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு இளைஞர் குணமடைந்து வீடு திரும்பினார்.

ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞர் மார்ச் 22ம் தேதி துபாயில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு மேற்பட்ட மருத்துவ பரிசோதனையில் சளி, காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

அங்கு அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பட்டன. பரிசோதனை முடிவில் இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் தொடர்ந்து அளிக்கப்பட்டன. மேலும் மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டது.

இதனால் இளைஞர் படிப்படியாக உடல்நலம் தேறினார். இதனால் மீண்டும் இளைஞரின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பட்டது. ஆய்வு முடிவில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இதனை அடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது மருத்துவர்களும், ஊழியர்களும் இளைஞருக்கும் பழங்கள் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். அதேபோல் ராணிப்பேட்டையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்கள் இருவரும் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பார்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்