"பிரேதத்தை எடுத்துடுவாங்க.. நைட்டே போகணும் சார்!".. 'லாக்டவுனில்' தம்பதியரின் 'கோரிக்கை'!.. 'நெகிழவைத்த' காவலர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் துக்க நிகழ்வில் கலந்துகொள்ள செல்வதற்கு வந்தவரின் அவசர தேவைக்காக காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் தனது சொந்த காரை கொடுத்து உதவி செய்துள்ள சம்பவம் பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியதால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மதுரை தெற்குவாசல் பகுதியை சேர்ந்த ரவி என்பவரது மாமியார் உசிலம்பட்டி அருகேயுள்ள ஏழுமலை கிராமத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததால் அவரது இறுதி சடங்கிற்கு தனது குடும்பத்துடன் செல்ல அனுமதி கேட்டு ரவி தெற்குவாசல் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சங்கர் மாவட்ட ஆட்சியர்தான் இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூற, இதைக்கேட்டு ரவியும் அவரது மனைவி ஜோதியும் அழுதபடியே, “நீங்களே அனுமதி வாங்கித் தாருங்கள், எங்களுக்கு அவ்வளவு விபரம் தெரியாது” என்று கூறியுள்ளனர்.
இதனையடுத்து உதவி ஆய்வாளர் சங்கர் ஆட்சியர் அலுவலகத்திற்கு தொடர்பு கொள்ள, “சம்பந்தப்பட்டவர்களை அடுத்த நாள் காலை வரை சொல்லுங்கள், அனுமதி தருகிறோம்” என்று ஆட்சியர் அலுவலக தரப்பிலிருந்து கூறியுள்ளனர். ஆனால் அன்றைய இரவே ரவியின் மாமியாரின் உடல் அடக்கம் செய்யவேண்டி இருந்ததால் உடனடியாக செல்வதற்கு ஏற்பாடு செய்யச் சொல்லி அந்த தம்பதியினர் கோரினார்.
இதனை அடுத்து மீண்டும் உதவி ஆய்வாளர் சங்கர், ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு இதுபற்றி விளக்கியதோடு காவல் நிலையத்திலேயே அனுமதி கொடுத்து அனுப்புவதற்கான அனுமதியை வாங்கினார். இதனைத் தொடர்ந்து உடனடியாக, காவல் நிலையத்திலேயே அனுமதி கடிதம் தயார் செய்து அவர்களுக்கு அளித்த காவல் உதவி ஆய்வாளர் சங்கர், தனது சொந்த காரிலேயே அவர்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். உதவி ஆய்வாளரின் இந்த மனித நேயம் மிக்க செயலுக்கு பொதுமக்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பிரிட்டன்' பிரதமரைத் 'தொடர்ந்து'.. 'கொரோனா' உறுதி செய்யப்பட்ட 'அடுத்த பிரதமர்'.. தற்காலிக ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!
- “அமெரிக்காவை டார்கெட் பண்ணி.. சீன ஆய்வகத்தில் உருவானதுதான் கொரோனா!”.. “எங்கிட்ட ஆதாரம் இருக்கு.. ஆனால்..”.. ட்ரம்ப்பின் வைரல் பேச்சு!
- 'இதுவரை' சந்தித்திராத 'படுமோசமான' நிலைக்கு தள்ளப்பட்ட 'அமெரிக்கா!'.. 'ஒரே நாளில்' தேசத்தையே புரட்டிப்போட்ட 'கொரோனா'!
- கொரோனாவுக்கு எதிரான 'போர்ல' சாதிச்சிட்டோம்... அடுத்து நம்ம 'டார்கெட்' இதுதான்... வெளிப்படையாக அறிவித்த சீன அதிபர்!
- 'சென்னையை' பொறுத்தவரை 'இங்க' தான் பாதிப்பு அதிகம்... ஆனாலும் 'சாயங்காலமானா' ஆரம்பிச்சிடுறாங்க!
- ஒரே மாசத்துல மக்கள் இப்டி 'தலைகீழா' மாறிட்டாங்க... அப்போ இனி 'இந்தியாவோட' வளர்ச்சியை... யாராலயும் தடுக்க முடியாது போல!
- ஊரடங்கால் தூய்மையான 'புண்ணிய' நதிகள்... அதைவிட இந்த 'அதிசயம்' தான் செம ஹைலைட்!
- அமெரிக்கா 'லேட்டஸ்டா' தான் சொன்னுச்சு... ஆனா தமிழர்கள் 'பல்லாயிரம்' வருஷத்துக்கு முன்னாடியே... மத்திய குழுவை 'வியக்க' வைத்த கபசுரக் குடிநீர்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 'தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு குறித்து'... 'முதல்வரின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர்'... 'மருத்துவ நிபுணர் குழுவின் முக்கிய தகவல்'!