‘பிரபல சமையல் மசாலா தயாரிக்கும் ஃபேக்டரியில்’... ‘திடீரென பரவிய தீ’... 'மிளகாய் நெடியால்'... 'தவித்துப்போன வீரர்கள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சமையல் மசாலா தயாரிக்கும் பேக்டரியில், ஏற்பட்டுள்ள தீ விபத்தால், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

தேனி அருகே உள்ள கோடாங்கிப்பட்டியில், ‘ஈஸ்டர்ன் எவரெஸ்ட் மசாலா’ தயாரிப்பு தொழிற்சாலை மற்றும் குடோனில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இங்கு இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள், மசாலா தயாரிக்கும் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, தொழிற்சாலையின் குடோனில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் மளமளவெனப் பரவிய தீ, ஆலையின் அடுத்தடுத்தப் பகுதிகளிலும்  தீப்பிடித்து எரிந்தது.

குடோனில் உள்ள மசாலா பொருட்கள் கருகியதால், அப்பகுதியில் கரும்புகை எழுந்தது. தீ விபத்து குறித்து உடனடியாக, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 5 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மசாலாப் பொருட்கள் கருகியதால், ஏற்பட்டுள்ள நெடி காரணமாக,  தீயை அணைப்பதில் வீரர்களுக்கு சிரமம் ஏறபட்டுள்ளது.

விபத்து ஏற்பட்டவுடன் ஊழியர்கள் வெளியேறிதால், எந்தவித ஆபத்தும் அவர்களுக்கு நிகழவில்லை. ஏசி அறையில், மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படும்நிலையில்,எட்டு மணி நேர போராட்டத்திற்குப் பின் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 2 ஆயிரம் டன் மசாலா பொருட்கள் உட்பட, பலகோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமானதாகவும் கூறப்படுகிறது.

FIRE, ACCIDENT, THENI, MASALA, POWDER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்