குளத்துல தண்ணி இருக்கு, எப்படி கொண்டு வரது...? 'களத்தில் கிராமத்து இளைஞர்கள்...' மகிழ்ச்சியில் ஊர் விவசாயிகள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிவகங்கை மாவட்டத்தில், பெரியகோட்டையை அடுத்த தெக்கூர் கிராமம் ஒரு முன்மாதிரியான கிராமமாக விளங்குகிறது. வ.உ.சி இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் தொடர்ந்து சில வருடங்களாக ஆகச்சிறந்த சமூகப் பணிகளை இக் கிராமம் செய்துவருகிறது.

Advertising
Advertising

சிவகங்கை மாவட்டத்தில், பெரியகோட்டையை சேர்ந்த, வ.உ.சி இளைஞர் மன்றத்தை சேர்ந்த இளைஞர்கள் பல வருடங்களாக சுத்தம் செய்ய முடியாமல் கிடந்த குளத்தின் வரத்துக் கால்வாயை ஜே.சி.பி மூலம் சுத்தம் செய்து கிராமத்தின் குளத்திற்கு உயிர்கொடுத்துளார்கள்.

இந்த கிராமத்தில் பிரதானமாக 2 குளங்கள் நிலத்தடி நீரை மேம்படுத்திவருகிறது. இதில் முக்கியமாக, கைலாசநாதர் சிவன் கோயில் குளம் பயனற்றுக் கிடந்தது. குளம் இருந்தும் தண்ணீர் வந்து சேரவில்லை. குளத்தை அரசு தூர்வாரியதால் நீர் தாராளமாக காணப்பட்டது. இந்நிலையில், அதற்கு நீரைக் கொண்டுவந்து சேர்க்கும் விதமாக சுமார் அரை கிலோ மீட்டர் இருந்த கால்வாயை மேம்படுத்தியுள்ளனர்.

சுற்றுச்சூழல் மாற்றத்தால் நீர்ப்பிடிப்புக் குளமாக மட்டும் மாறியது. இந்நிலையில், இந்தக் குளத்திற்கு வரும் வரத்துக்கால்வாய் சிமென்ட் மூலம் கட்டப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதென மண்கள் கொட்டப்பட்டு கால்வாய் அடைக்கப்பட்டது. சிமென்ட் கால்வாய் பொதுமக்களால் சுத்தம் செய்யமுடியாத அளவிற்குக் கடினமாக மாறியதால், அந்த நீர்வழிப்பாதை முழுமையாக முடங்கிவிட்டது. இந்நிலையில், குளம் அரசு சார்பாக தூர்வாரப்பட்டது. ஆனால், குளத்திற்கு வரும் கால்வாய் அடைபட்டதால், அதை ஜே.சி.பி மூலம் சுத்தம் செய்து நீர்வரத்துக்கு ஏற்றது போல் கால்வாயை மாற்றியுள்ளனர்.

குளத்திற்கு வரும் நீர்வழிப்பாதையைச் சரிசெய்து குளத்திற்கு உயிர்கொடுத்த இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிகிறது. இதனால் அந்த  பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்