'தமிழகத்தில்' 18 ஆக உயர்ந்த கொரோனா தொற்று... 'எந்த' மாவட்டத்தில் பாதிப்பு அதிகம்... அவர்களின் 'தற்போதைய' நிலை என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றை தடுக்க தமிழக அரசு 144 தடையுத்தரவினை மாநிலம் முழுவதும் அமல்படுத்தி இருக்கிறது. இதேபோல மத்திய அரசும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் இதுவரை 18 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அதில் மதுரையை சேர்ந்த 54 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ்நாடு முழுவதும் இதுவரை சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.
அதில் 15,298 பேர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் 28 நாட்கள் கண்டிப்பாக வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டவர்களில் 743 பேரின் ரத்த மாதிரி இதுவரை சோதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 608 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 120 பேரின் ரத்த மாதிரி பரிசோதனை வரவேண்டி உள்ளது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.
120 பேரின் ரத்த மாதிரி பரிசோதனை வரவேண்டி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று மேலும் 6 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 18 பேர் ஆக உயர்ந்தது.
1. காஞ்சீபுரத்தைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்கவர் ஓமன் நாட்டில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்டு சென்னை ஆஸ்பத்திரியில் கடந்த 7-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அவர் முழுமையாக குணம் அடைந்துள்ளார்.
2. டெல்லியைச் சேர்ந்த 25 வயது வாலிபர் தமிழகத்துக்கு கடந்த 18-ந்தேதி வந்த போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சென்னையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
3. அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த 21 வயது வாலிபர் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 20-ந்தேதி சென்னையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
4. நியூசிலாந்தில் இருந்து சென்னை வந்த 65 வயது முதியவர் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 21-ந்தேதி சென்னையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
5. வெளிநாட்டில் இருந்து வந்த 69 வயது முதியவர் கொரோனா பாதிப்பு காரணமாக ஈரோட்டில் கடந்த 21-ந்தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார்.
6. வெளிநாட்டில் இருந்து வந்த 75 வயது முதியவர் கொரோனா பாதிப்பு காரணமாக ஈரோட்டில் கடந்த 21-ந்தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார்.
7. ஸ்பெயினில் இருந்து கோவை திரும்பிய 25 வயது பெண் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 22-ந்தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார்.
8. துபாயில் இருந்து நெல்லை திரும்பிய 43 வயது உடையவர் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 22-ந்தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார்.
9. அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னை வந்த 64 வயது பெண் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 22-ந்தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார்.
10. சென்னை போரூரைச் சேர்ந்த 74 வயது முதியவர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.
11.புரசைவாக்கத்தைச் சேர்ந்த 52 வயது பெண் சுவிட்சர்லாந்தில் இருந்து சமீபத்தில் சென்னை திரும்பினார். அவரும் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்.
12. கீழ்க்கட்டளையைச் சேர்ந்த 25 வயது பெண் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் சிகிச்சை பெற்று வருகிறார். இவரும் சுவிட்சர்லாந்தில் இருந்து திரும்பியவர் ஆவார்.
13. நியூசிலாந்தில் இருந்து திரும்பிய 65 வயது முதியவர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்.
14. லண்டனில் இருந்து சென்னை வந்த வாலிபருக்கு கொரோனா பாதித்துள்ளது.
15. சைதாப்பேட்டையைச் சேர்ந்த 55 வயது பெண்ணுக்கும் கொரோனா பாதித்துள்ளது. அவர் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
16. புரசைவாக்கத்தை சேர்ந்த 25 வயது வாலிபர் ராஜீவ் காந்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் லண்டனில் இருந்து திரும்பியவர்.
17. திருப்பூரை சேர்ந்த 48 வயது ஆண் ஒருவர் கோவை இ.எஸ்.ஐ.ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் லண்டனில் இருந்து திரும்பியவர்.
18. மதுரையில் வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 54 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 24 மணி நேரத்தில் '514 பேர்' பலி... இத்தாலி, சீனாவுக்கு அடுத்து... 'மோசமான' நிலையில் சிக்கிய நாடு!
- '16 ஆயிரத்தை' தாண்டிய பலி எண்ணிக்கை... 'கொரோனா' தோன்றிய சீனாவை விட... 'இந்த' நாடுகளில் தான் இறப்பு எண்ணிக்கை அதிகம்!
- கொரோனா' பாதித்த 'மதுரை நபர்' ஆபத்தான நிலையில் உள்ளார்... அமைச்சர் 'விஜயபாஸ்கர்' தகவல்...தமிகழத்தில் வைரஸ் 'பரவல்' அதிகரித்துள்ளதாகவும் 'விளக்கம்'...
- Video: இரவு-பகலாக 'இயங்கும்' இடுகாடுகள்... களமிறங்கிய 'கியூபா' மருத்துவர்களால் ... படிப்படியாக குறையும் கொரோனா 'இறப்பு' விகிதம்!
- ‘குழந்தைக்கு தடுப்பூசி போட போன நர்ஸ்’.. தாய் சொன்ன பகீர் தகவல்.. மதுரையை அதிரவைத்த மற்றொரு சம்பவம்..!
- தமிழகத்தில் கொரோனா பரவிய 'முதல்' நபர்... இந்த '10 மாவட்டங்களில்' பாதிப்பு அதிகம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
- இன்று முதல் 'தமிழ்நாட்டில்' 144 தடையுத்தரவு... இதெல்லாம் 'கண்டிப்பா' செய்யவே கூடாது... முழு விவரம் உள்ளே!
- ‘நீதிமன்றத்தில் கையெழுத்திட வந்த இளைஞர்’... ‘மனைவி, மகன் கண்முன்னே நடந்த பயங்கரம்’... 'நெல்லையில் பரபரப்பு சம்பவம்'!
- ‘தமிழகத்தில் இரு தனியார் ஆய்வகங்களில்’... ‘கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம்’... ‘இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்’!
- 'திடீர் நெஞ்சுவலி'... சிகிச்சையின் போதே 'உயிரிழந்த' முதியவர்... 'பலியானோர்' எண்ணிக்கை '8 ஆக' உயர்வு!