24 மணிநேரத்தில் உருவாகும் ‘கான்கிரீட் வீடு’.. என்னங்க சொல்றீங்க..? ஆச்சரியத்தில் உறைந்த ‘பொள்ளாச்சி’ மக்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொள்ளாச்சியில் 24 மணிநேரத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டதை கண்டு பொதுமக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு குறைபட்சம் ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகின்றன. பேஸ்மட்டம், சுற்றுச்சுவர், கான்கிரீட் ஸ்லாப் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பொள்ளாச்சி பகுதியில் பிரிகாஸ்ட் கான்கிரீட் ஸ்லாப் (Precast Concrete Slabs) என்ற புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 24 மணிநேரத்தில் கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்கு பொள்ளாச்சி பொறியாளர்கள் சங்கத்தினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே ராசக்காபாளையம், கோட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் இந்த புதிய தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது. கோவையில் உள்ள வேலன் என்ற தனியார் கட்டுமான நிறுவனம் கட்டிடத்திற்கான வரைபடத்தை தயாரித்து, பிரிகாஸ்ட் ஸ்லாப் தொழில் நுட்பத்தில் ராட்சத ஸ்லாப்புகளை தயார் செய்து கட்டிடங்களை அமைத்து வருகின்றனர்.
இந்த பிரிகாஸ்ட் ஸ்லாப் தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும் வீடுகளை சில ஆண்டுகளுக்கு பிறகு வேறு இடத்துக்கு கொண்டு சென்று அமைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளதாக பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். காலையில் காலியாக இருந்த இடத்தில் மாலைக்குள் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டு வருவதை அப்பகுதிகள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் இந்த தொழில்நுட்பத்தில் வீடுகள் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்...? 'பேசாம இத பண்ணிடுவோம்...' 'நிவர் புயல் பயத்தில்...' - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விவசாயி செய்த காரியம்...!
- 'பிரபல நடிகையின் வீட்டில்...' 'நள்ளிரவில் சுவர் ஏறி குதித்த நபர்...' யார் இந்த மர்ம மனிதன்...? - பதற வைத்த சிசிடிவி காட்சி...!
- 'மாடியில ஜன்னல் கம்பி அறுக்கிற சத்தம்...' 'டவுட் ஆன கீழ் வீட்டுக்காரர்...' - டக்குன்னு வேற மாதிரி யோசிச்சு பதில் சொன்ன திருடன்...!
- 'வீட்டுக்குள்ள போக வழியில்ல...' 'இடையில கட்டப்பட்ட சுவர்...' வெளியூர் போயிட்டு வரதுக்குள்ள...' - நடுரோட்டில் தவித்த பெண்மணி...!
- 'வெறும் 87 ரூபாய்க்கு ஏலத்திற்கு வரும் வீடுகள்!!!'... 'அதுவும் எந்த நாட்டுலனு தெரியுமா?'... 'அசத்தல் அறிவிப்புக்குப்பின் இப்படியொரு காரணமா?!!'...
- “மாட்டோம்... இது எங்க வீடு!”.. '43 வருஷமாக வாடகை வீட்டை சொந்தம் கொண்டாடிய குடும்பம்!'.. 'நொடியில் மளமளவென சரிந்து தரைமட்டமாகிய 5 மாடி குடியிருப்பு பில்டிங்!'.. சென்னையில் பரபரப்பு!
- 'தனது' குடிசைக்கு 'தானே' தீவைத்து 'எரித்துவிட்டு'... 'போலீஸில்' புகார் அளித்த 'இளைஞர்'!.. ‘இப்படியும் ஒரு காரணமா?’
- “சென்னையில் OLX, நோ புரோக்கர்-ல வீடு பாக்குறவங்க உஷார்!”.. வாடகை, லீஸுக்கு வீடு தேடுபவர்களை குறிவைத்து மோசடி!
- 'பாழடைஞ்சு கெடந்த வீட்ல கட்டுக்கட்டா பணம் நகை...' 'வீடு இருந்தும் 2 பாட்டிகளுக்கும் ரோட்ல தான் வாழ்க்கை...' - விஷயம் தெரிஞ்சு போலீசார் செய்த காரியம்...!
- 'ஐயா...! எங்க வீடுகளை காணோம்யா...' 'கண்டு புடிச்சு கொடுங்க...' 'வடிவேலு காமெடி போல்...' - புகார் அளித்த பொதுமக்கள்...!