‘அனைத்து ஏழை மக்களுக்கும் கான்கிரீட் வீடு’!.. தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி அதிரடி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அனைத்து ஏழை மக்களுக்கும் கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கட்சிகளுக்கு இடையே கூட்டணி, தொகுதி பங்கீடு இறுதிசெய்யப்பட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு வருகின்றன. இதனிடையே வேட்புமனு தாக்கலும் நடைபெற்று வருகிறது. இதனால் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, ‘16,400 கோடி ரூபாய் செலவில் காவேரி குண்டாறு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்துள்ளோம். அனைத்து ஏழை மக்களுக்கும் கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும்’ என்று தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்