'வடபழனியில்' பரபரப்பு... பைக்கில் சென்ற இளம்பெண்ணுக்கு 'பாலியல்' தொல்லை... நீங்களே இப்படி செய்யலாமா? அடித்து உதைத்த பொதுமக்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை வடபழனி அருகே பைக்கில் சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை பொதுமக்கள் அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் தன்னுடைய பணி முடிந்து, நேற்று முன்தினம் இரவு தன்னுடைய நண்பருடன் பைக்கில் சென்றிருக்கிறார். அசோக் பில்லர் அருகே செல்லும்போது அருகில் பைக்கில் வந்த மற்றொரு நபர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் கத்தி கூச்சலிட்டு இருக்கிறார். தொடர்ந்து தன்னுடைய நண்பருடன் பைக்கில் சென்ற அந்த நபரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். எம்.எம்.டி.ஏ அருகே சென்றபோது அந்த நபரின் பைக் மீது மோதி அவரை கீழே தள்ளி பொதுமக்கள் உதவியுடன் அவரை அடித்து உதைத்துள்ளனர்.
தகவலறிந்த வடபழனி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரை பொதுமக்களிடம் இருந்து மீட்டனர். தொடர்ந்து இளம்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரைக்கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது தான் கமாண்டோ வீரராக பணியாற்றி வருவதாகவும், தன்னுடைய பெயர் முரளி கிருஷ்ணன் என்றும் அந்த நபர் தெரிவித்து இருக்கிறார். குடிபோதையில் இருந்ததால் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் அவர் விளக்கமளித்து உள்ளார். இதையடுத்து கமாண்டோ பிரிவின் உயர் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மசாஜ்' செண்டர் பெயரில் பாலியல் தொழிலா?... புகாரின் அடிப்படையில் கரூர் 'போலீசார்' தீவிர விசாரணை!
- 'வேலைக்கு போக சொல்லி திட்டுனா'... கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல், 'கணவர்' செய்த கொடூரம்... அதிர்ந்து போன 'திருச்சி' போலீஸ்!
- நடுவானில் 'கொரோனா வைரஸ்' இருப்பதாக கூறிய வாலிபர்... விமானத்தை 'அவசரமாகத்' தரையிறக்கி... தலையில் தட்டி 'இழுத்துச்சென்ற' போலீஸ்!
- ‘கொரோனா’ அறிகுறியுடன் சிகிச்சை பெற்றவர் ‘தப்பியோட்டம்?’... ‘அதிர்ச்சியடைந்த’ மருத்துவர்கள் ‘போலீசாரிடம்’ கோரிக்கை... ‘அச்சத்தை’ ஏற்படுத்தியுள்ள சம்பவம்...
- VIDEO: ‘நிறுத்த சொன்னா நிக்கமாட்டயா’!.. டிராஃபிக் போலீஸ் மீது மோதிய கார் டிரைவர்.. பரபரக்க வைத்த வீடியோ..!
- ‘திருமணத்திற்கு முன்பே காலையில்’... ‘குழந்தைப் பெற்ற கல்லூரி மாணவி’... ‘மாலையில் காதலரை கரம் பிடித்த சம்பவம்’!
- ‘இதுக்கு என்ன தண்டனை? கூகுள்ல தேடியும் கிடைக்கல’... போலீசாரை பதறவைத்த ‘ஐடி’ ஊழியர்... ‘அடுத்து’ நடந்த ‘நெகிழ்ச்சி’ சம்பவம்...
- ‘எதிர்ப்பை மீறி காதல் கல்யாணம்’.. 5 மாத கர்ப்பிணி மகளை துடிக்க துடிக்க தந்தை செய்த கொடூரம்..!
- ‘கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசி, ஓட ஓட விரட்டி கொலை’.. பட்டப்பகலில் காங்கிரஸ் பிரமுகருக்கு நடந்த பயங்கரம்..!
- ‘182 பெண்களின் அந்தரங்க வீடியோ’.. ‘சிக்கிய லேப்டாப்’.. பொள்ளாச்சி போல் உலுக்கிய மற்றொரு சம்பவம்..!