சமாதானம் பேச தானே கூப்டீங்க...? 'பைக்கை எட்டி மிதிச்சுருக்கார்...' 'கண் இமைக்கும் நேரத்தில்...' கெத்து காட்டியதால் நடந்த பயங்கரம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சமாதானம் பேசுவதாக கோவிலின் பின்புறத்திற்கு அழைத்து சென்று பட்டப்பகலியே அயப்பாக்கத்தை நபரை சராமாரியாக வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

அயப்பாக்கத்தை அடுத்த அஞ்சுகம் நகரைச் சேர்ந்தவர் பாண்டியன் (31). இவருக்கு உஷா என்ற மனைவியும் 8 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். சென்னை வானகரம் மீன் மார்க்கெட்டில் லோடுமேனாக பணிபுரியும் பாண்டியனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் 3 தினங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் பாண்டியன் அந்த கும்பலில் இருந்த ஒருவரின் பைக்கை எட்டி உதைத்துள்ளார். மேலும் என்னை யாரும் ஒன்றும் பண்ண முடியாது என கெத்தாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் பாண்டியனை எப்படியாவது தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளது.

இதன் காரணமாக பாண்டியனை சமாதானம் செய்வதாக கூறி இன்று காலை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் அவரது வீட்டுக்கு வந்துள்ளார். பேசிக்கொண்டே இருவரும் அந்தப்பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு வந்தனர். அங்கு அவரிடம் சண்டையிட்ட நபர்களும் கும்பலாக நின்று கொண்டிருந்தனர்.

பாண்டியனுக்கு அந்த கும்பலை சேர்ந்த நபர்களும் பேசிக்கொண்டிருக்கும் போது தீடீரென கும்பலில் இருந்த ஒருவர் பாண்டியனை தாக்கியுள்ளார். `சமாதானம் பேச தானே அழைத்து வந்தீர்கள்?' என்று பாண்டியன் கேட்பதற்குள், மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாளால் அவரை மர்மக்கும்பல் வெட்டிச் சாய்த்தது. ரத்த வெள்ளத்தில் பாண்டியன் கீழே சரிந்தார்.

மேலும் பல வெட்டுக்காயங்களுடன் பாண்டியன் அலறியுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்தக் கும்பல் தப்பிச்சென்றது. மயக்கமடைந்த பாண்டியனை பார்த்த அங்கிருந்த மக்கள், திருமுல்லைவாயல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் புருஷோத்தம்மன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று, பாண்டியனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.

ஆனால் பாண்டியன் ஏற்கனவே இறந்து விட்டதாக அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் கூறினர். இதையடுத்து அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன், ஆவடி உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரித்தனர். சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்துவருகின்றனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட பாண்டியன் மீது இதற்கு முன்பே குற்ற பின்னணி உள்ளதாகவும், பள்ளிக்காரணை காவல்நிலையத்திலும் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்நிலையத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும், பாண்டியனின் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் கூலித் தொழிலாளிகள் என்ற தகவலும் போலீசாருக்குத் தெரியவந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்