'சுப்ரீம் கோர்ட்டுக்கே போனாலும்...' 'கடையை திறக்க விட மாட்டோம்...' 'நாங்க வந்து தடுப்போம்...' 'கமல்ஹாசன் சவால்...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழர்களின் உயிரையும் பணயம் வைத்து, சூதாட அனுமதிகேட்டு நீதிமன்றம் செல்லுமாம் தமிழக அரசு, எங்கும் வருவோம் உமைத் தடுக்க. என மக்கள் நீதி மையை கட்சி தலைவர் கமல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

உத்தரவிட்டது. டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என மக்கள் நீதிமய்யம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது.

இதுகுறித்து மக்கள் நீதிமய்யத்தலைவர் கமல்ஹாசன், மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது என்றும், இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆன்லைனில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், "குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட தமிழ் பெண்களின்  தாலிகளோடு, குடிக்காத தமிழர்களின் உயிரையும் பணயம் வைத்து, சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லுமாம் தமிழக அரசு. எங்கும் வருவோம் உமைத் தடுக்க. மக்கள் நீதியே வெல்லும்." என பதிவிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்