‘பூட்டிய வீட்டை நோட்டமிடும் பெண்’.. செல்போன் ஜாமர், வாக்கிடாக்கி.. ‘காட்டிக்கொடுத்த நகைகள்’.. அடுத்தடுத்து திடுக்கிட வைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வாக்கிடாக்கியுடன் ஹைடெக்காக பூட்டிய வீடுகள பெண் உட்பட மூன்று பேர் கொள்ளையடித்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் சூரமங்கலத்தை சேர்ந்த ஸ்ரீபாஸ்யம் என்பவர் அப்பகுதியில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இவரது வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து 2.25 கிலோ தங்க நகைகள், 57 கேரட் வைரங்கள், 6 லட்ச ரூபாய் மற்றும் 400 அமெரிக்க டாலர்கள் கொள்ளையடிக்கப்பட்டன. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், இரு வாலிபர்கள் சுவர் ஏறி குதித்து வருவதும், பின்னர் கொள்ளையடித்துவிட்டு திரும்பி செல்வதும் பதிவாகியிருந்தது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கடந்த 9 மாதங்களாக தீவிரமாக தேடி வந்தனர். அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட கைரேகைகளை வைத்து 80 பழைய குற்றவாளிகளுடன் போலீசார் ஒப்பிட்டு பார்த்தனர். ஆனால் அவர்கள் யாரும் கைரேகை ஒத்துப்போகவில்லை.

இந்தநிலையில் கடந்த மாதம் பெங்களூரு நகைக்கடை ஒன்றில் கொள்ளையடிக்க முயன்ற பெண் உட்பட 3 கொலம்பிய கொள்ளையர்களை பெங்களூரு போலீசார் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பெங்களூரில் 31 வீடுகள், சேலத்தில் நகைக்கடை அதிபர் வீட்டில் திருடியதையும் ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து திருடிய மொத்த நகைகளையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த நகைகள் அனைத்தையும் போலீசார் தனித்தனியாக தொங்கவிட்டு காட்சிப்படுத்தினர். பெங்களூரு போலீசார் காட்சிப்படுத்திய நகைகள் அனைத்து தன் வீட்டில் திருடுபோனது என சூரமங்கலம் போலீசாரிடம் ஸ்ரீபாஸ்யம் தெரிவித்தார். இதனை அடுத்து சூரமங்கலம் போலீசார் பெங்களூரு விரைந்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கொலம்பியா கொள்ளையர்கள் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலம்பியா நாட்டில் இருந்து விமானத்தில் வந்துள்ள இந்த கொள்ளை கும்பல், பூட்டிய வீடுகளை பெண்ணைக் கொண்டு நோட்டமிட்டு, வீட்டில் ஆள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு பூட்டை எளிதாக உடைத்து கொள்ளயடித்து செல்கின்றனர்.

செல்போன் சிக்னல் காட்டிக் கொடுத்துவிடும் என்பதால் செல்போன் ஜாமர் கருவி தகவல் தொடர்புக்கு வாக்கிடாக்கியை பயன்படுத்தியுள்ளனர். எந்தவொரு கதவையும் எளிதாக உடைக்கும் அளவுக்கு சாதனங்களை கொலம்பியா கொள்ளையர்கள் வைத்துள்ளனர். பெரும்பாலும் பங்களா போன்ற வீடுகள் மற்றும் நகைக்கடைகளை குறிவைத்து கொள்ளையடிப்பது இவர்களது வழக்கமாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஐந்துக்கும் மேற்பட்ட கொலம்பியர்கள் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களில் 3 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பல காவல்நிலையங்களுக்கு இந்த கொலம்பிய கொள்ளையர்களின் புகைப்படங்கள் அனுப்பி வைக்கபட்டுள்ளன.

இந்த நிலையில் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள் அருகில் உள்ள காவல்நிலையங்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு சென்றால் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு கண்காணிக்க வசதியாக இருக்கும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்