சென்னையில் கல்லூரி மாணவர்கள் பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேருந்து தினம் கொண்டாட்டம் என்ற பெயரில், கல்லூரி மாணவர்கள் சென்னையில் ரகளையில் ஈடுபடுவது வழக்கம். இதுபோன்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் செயல்படக் கூடாது என்று மாணவர்களுக்கு ஏற்கனவே காவல்துறையினர் அறிவுறுத்தி இருந்தனர். கோடை விடுமுறைக்குப் பின் கலைக் கல்லூரிகள் இன்றுதான் திறக்கப்பட்டன.
இந்நிலையில் சென்னை அமைந்தகரை புல்லா அவென்யுவில், மாநகரப் பேருந்தை சிறைபிடித்து பேருந்து தினம் என்ற பெயரில், கல்லூரி மாணவர்கள் அட்டகாசம் செய்தனர். 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென உள்ளே ஏறியதால், பயணிகள் பலர் அச்சமடைந்து கீழே இறங்கி விட்டனர். பேருந்தின் மேற்கூரையில் நின்றபடியும், ஜன்னல் கம்பிகளை பிடித்து அபாயகரமான முறையில் தொங்கிக் கொண்டும் கூச்சல் எழுப்பியபடி மாணவர்கள் இருந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினரைப் பார்த்ததும் பேருந்து தினம் கொண்டாடிய மாணவர்கள் தப்பி ஓடினர். அவர்களில் 17 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களின் கொண்டாட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இளைஞரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய கும்பல்..’ பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்..
- 'மோசமான வரலாற்றை நோக்கி சென்னை'... 'எச்சரிக்கும் நிபுணர்கள்'!
- 'ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மையான மனசு'... குவியும் பாராட்டுகள்!
- 'சேத்துப்பட்டு' ரயில் நிலையத்தில் ...'இளம் பெண்ணிற்கு நேர்ந்த பயங்கரம்'... கதிகலங்க வைக்கும் சம்பவம்!
- 'அப்பாடா, நமக்கும் வாய்ப்பு இருக்கு!'... வானிலை மையம் புதிய அறிவிப்பு!
- 'கத்தி குத்தில்' முடிந்த 'தண்ணீர் சண்டை'... சென்னையில் 'பெண்ணிற்கு நேர்ந்த சோகம்'!
- 'நான் மயக்கத்துல இருந்தேன்'...'சென்னையின் பிரபல மருத்துவமனையில்'...'பெண்ணிற்கு' நேர்ந்த கொடூரம்!
- 'ஆபீசுக்கு வராதீங்க, வீட்ல இருந்தே வேலை பாருங்க'... 'ஐ.டி. நிறுவனங்களின் அதிரடி'!
- ’அடேய் ... ஓடுனா மட்டும் விட்ருவோமா..’ நேசமணி ஸ்டைலில் சென்னையில் நடந்த பரபரப்பு சேஸிங்!
- 'அடுத்த 2 நாள் பத்திரமா இருந்துக்கோங்க'... வானிலை மையம் அறிவிப்பு!