‘காலேஜுக்கு லேட் ஆகிடுச்சு’!.. ‘நிற்காமல் போன பஸ்’! கட்டையால் கண்ணாடியை உடைத்த மாணவர்கள்’.. பரபரப்பு சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கல்லூரி நேரத்தில் நிற்காமல் சென்ற பேருந்தின் கண்ணாடியை மாணவர்கள் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிலால் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாணவர்கள் கும்கோணத்தில் உள்ள கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். இப்பகுதியில் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுவதாகவும், அவையும் சரிவர வருவதில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் தினமும் கல்லூரிக்கு தாமதமாக செல்வதாக அப்பகுதி மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இன்று காலை சிலால் கிராமத்திற்கு நீண்ட நேரமாக பேருந்து ஏதும் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் கல்லூரி செல்ல வேண்டிய மாணவர்கள் வெகுநேரமாக காத்திருந்திருந்துள்ளனர். அப்போது வந்த அரசு பேருந்தும் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கீழே கிடந்த கட்டையால் பேருந்தின் கண்ணாடியை தாக்கியுள்ளனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மற்றொரு பேருந்தில் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். உடைக்கப்பட்ட பேருந்து கண்ணாடியை சரிசெய்து தருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

COLLEGESTUDENTS, BUS, ARIYALUR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்