டிக்கெட் கேட்ட நடத்துனரை கத்தியால் வெட்டிய கல்லூரி மாணவர்கள்..! மதுரையில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரையில் டிக்கெட் கேட்ட அரசு பேருந்து நடத்துனரை கல்லூரி மாணவர்கள் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து ராஜக்கூர் செல்லும் மாநகர பேருந்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் இரு மாணவர்கள் ஏறியுள்ளனர். பேருந்தில் நடத்துனர் கணேஷசன் என்பவர் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டே வந்துள்ளார்.

அப்போது கருப்பாயூரணி அருகே வரும் போது மாணவர்களிடம் கணேஷன் டிக்கெட் கேட்டுள்ளார். இதில் மாணவர்களுக்கும், நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் நடத்துனரை தாக்கிவிட்டு மாணவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த நடத்துனர் கணேஷனை பேருந்தில் இருந்த பயணிகள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சென்னையில் ‘ரூட்டுதல’ என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் பேருந்தில் சண்டை போட்ட சம்பவம் சில தினங்களுக்குமுன் நடத்த நிலையில், மதுரையில் அரசு பேருந்து நடத்துனரை கல்லூரி மாணவர்கள் கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

COLLAGE, STUDENTS, BUS, CONDUCTOR, KNIFE, MADURAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்