'காதலனை ஆள்வைத்து கடத்திய காதலி'... 'அமெரிக்க தப்பிச்செல்ல முயற்சி'... 'டென்னிஸ் வீராங்கனை ஏர்போர்ட்டில் கைது'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் காதலனை கடத்தி செல்போனை பறித்து நாடகமாடிய அமெரிக்கா காதலியான டென்னிஸ் வீராங்கனை, அமெரிக்கா தப்பிச் செல்ல முயன்றபோது போலீசார் கைதுசெய்துள்ளனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் ராமநாதன் தெருவைச் சேர்ந்த நவீத் அகமது, தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை நவீத், தனது காதலியுடன் கடந்த வாரம் சென்னையில் உள்ள திரையரங்கில் சினிமா பார்த்துள்ளார். பின்பு, காதலியை சேத்துப்பட்டில் உள்ள குடியிருப்பில் இறக்கி விட்டு நவீத் பைக்கில் திரும்பியுள்ளார். அப்போது சேத்துப்பட்டு அருகே இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, நவீத் அகமதுவை மர்ம நபர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றனர்.

கத்திபாரா பாலத்துக்கு கீழே நவீத் அகமதுவை அந்தக் கும்பல் அடித்து உதைத்து, அவரது ஐபோனை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய டி.பி. சத்திரம் போலீசார், வேளச்சேரியைச் சேர்ந்த பாஸ்கர், சரவணன் ஆகியோரை முதலில் கைது செய்தனர். இந்த இருவரிடமும் நடத்திய விசாரணையில் நவீத்தின் செல்போனை பறிக்கவே கடத்தியதாக வாக்குமூலம் கொடுத்தனர். செல்போனை பறிக்க , நவீத்தின் காதலி தான் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டார் என கண்டுபிடிக்கப்பட்டது.

காதலில் பிரச்சனை ஏற்பட்டு, இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என நவீத் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், தனது நண்பர்கள் மூலம் கடத்தி அந்த செல்போனை பறிக்க டென்னிஸ் வீராங்கனையான வாசவி திட்டமிட்டுள்ளார். சென்னை ராயபுரத்தை பூர்வீகமாக கொண்ட வாசவி, டென்னிஸ் விளையாட்டு வீராங்கணை. மாநில அளவிலும், இந்தியாவில் நடந்த பல்வேறு தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அமெரிக்காவில் படித்து வரும் வாசவி அங்கேயே டென்னிஸ் பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் வாசவியை தேடி வரும் தகவல் தெரிந்து அவர் அமெரிக்கா செல்ல முயன்றார். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் வைத்து வாசவியை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த நுங்கம்பாக்கம் கோகுல், அரும்பாக்கம் அபிசேக் ஆகியோரையும் வாசவி மூலம் போன் செய்ய வைத்து கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய பள்ளி மாணவன் ஒருவனையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கடத்தலுக்கு காரணமான ஆபாச படங்கள் உள்ள செல்போனை நவீத்திடம் இருந்து பறித்த அவர்கள் கழிவு நீர் கால்வாயில் வீசியுள்ளதாக கூறும் போலீசார், இந்த விவகாரத்தில் தவறான வழியில் செல்லாமல் போலீசாரிடம் புகார் கொடுத்திருந்தால் காதலனை கைது செய்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். நவீத்தை, கடத்தல் கும்பல் துரத்திச்செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

CHENNAI, LOVESTORY, TENNIS, ARRESTED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்