'பிறந்தநாள்' கொண்டாட சென்ற மாணவி... 'காதலன்' கண்முன்னே பலியான பரிதாபம்... கதறித்துடித்த காதலன்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காதலனுடன் பிறந்தநாள் கொண்டாட வெளியில் சென்ற கல்லூரி மாணவி, அவரின் கண்முன்னே பலியான பரிதாபம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் ஏற்காடு பகுதியை சேர்ந்த ஆர்த்தி(19) என்ற கல்லூரி மாணவியும், திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த அசோக்(25) என்னும் வாலிபரும் காதலித்து வந்தனர். நேற்று ஆர்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் அசோக்குடன் பிறந்தநாள் கொண்டாட வெளியில் சென்றுள்ளார். இருவரும் பைக்கில் பெங்களூர் வரை சென்று அங்கு பிறந்தநாளை கொண்டாட ஆசைப்பட்டு உள்ளனர்.
பைக்கில் சென்றபோது தனக்கு பைக் ஓட்ட கற்றுத்தரும்படி ஆர்த்தி கேட்டிருக்கிறார். இதையடுத்து அசோக் அவரை முன்னால் உட்கார வைத்து பைக் ஓட்ட கற்றுத்தந்து இருக்கிறார். தீவட்டிப்பட்டி அருகே சென்றபோது மற்றொரு பைக்கில் இவர்கள் சென்ற பைக் மோதியது. இதில் ஆர்த்தி நிலைதடுமாறி கீழே விழ, சரியாக அந்நேரம் ஜல்லிக்கற்கள் ஏற்றிக்கொண்டு பின்னால் வந்த லாரியில் ஆர்த்தியின் தலை மற்றும் உடல் சிக்கியது. இதில் ஆர்த்தி அசோக் கண்முன்னே பரிதாபமாக பலியானார்.
ஆர்த்தி ரோட்டில் உருண்டு விழுவதை பார்த்து லாரி டிரைவர் லாரியை வலதுபுறமாக திருப்பி விபத்தினை தவிர்க்க பார்த்திருக்கிறார். எனினும் ஆர்த்தியின் உடல் பின்சக்கரத்தில் சிக்கிக்கொண்டது. இதனால் விபத்தினை தவிர்க்க முடியவில்லை. தன்னுடைய கண்முன்னே ஆர்த்தி பலியானதை பார்த்து அசோக் கதறியழுதார். விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சாலையோரம் எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்’.. அருகே கிடந்த ‘மதுபாட்டில்கள்’.. மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!
- ‘மனைவியை நடுத்தெருவில் இழுத்துப் போட்டு’.. ‘அடிக்கும் காவலர்’.. வீடியோ வெளியானதால் பரபரப்பு!
- 'மனைவியை' கொன்று... இறந்த பின்னரும் 'கணவன்' செய்த கொடுமை... 'அதிர்ச்சியில்' உறைந்து போன மக்கள்!
- 'லவ்வர்ஸ' தாக்குறது... அவங்களுக்கு 'கல்யாணம்' பண்ணி வைக்குறதெல்லாம் வச்சுக்காதீங்க... மீறி செஞ்சீங்கன்னா? அவ்ளோதான்... கடும் எச்சரிக்கை!
- வீட்டுல இருந்த 'பொண்டாட்டி',புள்ளைங்கள காணோம் சார்... எப்டியாவது 'கண்டுபுடிச்சு' கொடுங்க... காவல் நிலையம் சென்ற 'காதல்' கணவர்!
- அவ உனக்கு 'தங்கச்சி' வேணும், இப்டி பண்ணாத... 'கண்டித்த' அண்ணன்... கடைசியில் நடந்த பயங்கரம்!
- 'வேலூர்' அருகே பயங்கரம்... சிறுமியை 8 மாச 'கர்ப்பிணியாக்கிய' சொந்த அண்ணன்... அதிர்ச்சியில் 'பெற்றோர்' எடுத்த முடிவு!
- '12-ம் வகுப்பில்'... 'இந்தப் பாடம் படிக்காமலும்'... 'இன்ஜினியரிங் சேரலாம்'... விபரங்கள் உள்ளே!
- ‘1 லட்சம் ரூபாய்’ பரிசு... ‘இத’ மட்டும் சொன்னா வாங்கிக்கலாம்... ‘பிரபல’ ஆன்லைன் நிறுவனத்தின் பெயரில் ‘அதிர்ச்சி’ கொடுத்த ‘மோசடி’ கும்பல்...
- கோயிலுக்குமுன் தனியாக அழுதுகொண்டிருந்த ‘சிறுமி’.. ‘ஆட்டோவில் கடத்தி 6 மாதமாக..!’.. வெளியான பகீர் தகவல்..!