அந்த கல்லூரி பசங்க போட்ட உயிர் பிச்சையில் வாழ விரும்புல... ஆடியோ வெளியிட்டு ரயில் முன் பாய்ந்த கல்லூரி மாணவர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கல்லூரி மாணவர் ஒருவரை புறநகர் ரயில் நிலையம் ஒன்றில் வேறு கல்லூரி மாணவர்கள் கேலி, கிண்டல் செய்தார்கள் என அதே இடத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
அரக்கோணம் குருவராஜப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் குமார். மாநிலக் கல்லூரியில் முதுகலை வரலாறு பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று வழக்கம் போல் கல்லூரிக்குச் சென்று வகுப்புகளை முடித்த குமார் பிற்பகல் வீடு திரும்ப புறநகர் ரயிலில் ஏறியுள்ளார். குமார் உடன் அவர் நண்பர் நவீன் என்பவரும் உடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
திருநின்றவூர் அருகே ரயில் நின்ற போது வேறு கல்லூரி மாணவர்கள் சிலர் குமார் மற்றும் நவீனை வழிமறித்து கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. நடைமேடையில் இந்தப் பிரச்னை நடந்து கொண்டிருக்கும் போது ரயில் கிளம்ப நவீன் என்ற மாணவன் தப்பித்து ரயிலில் ஏறியுள்ளார். ஆனால், குமார் அந்த வேறு கல்லூரி மாணவர்கள் மத்தியில் இருந்துள்ளார்.
குமாரை அவர்கள் அடித்து அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்த மாணவர்கள் குமாரை விட்டுவிட்டு சென்றுவிட்டனர் எனத் தெரிகிறது. அதன் பின்னர் குமார் தனது செல்போனில் தனது நண்பர்களுக்கு ஆடியோ ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், ‘அந்தக் கல்லூரி பசங்க கொடுத்த உயிர் பிச்சையில் என்னால் வாழ முடியாது. என்னை யாரும் தப்பா நினைக்க வேண்டாம் மச்சான்.
அம்மா, அப்பா என்னை தப்பா நினைக்காதிங்க. நான் செத்துடறேன், யாருமே என்னை தப்பா நினைக்காதிங்க. என் குடும்பத்துக்கு சொல்லிகிறேன்’ எனப் பதிவு செய்த ஆடியோவை அனைவருக்கும் அனுப்பிவிட்டு ரயில் முன் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. அந்த ஆசியோவில் வேறு சில மாணவர்களின் குரலும் கேட்பதாகவும் கூறப்படுகிறது.
இறந்த மாணவனின் உடலை திருவள்ளூர் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து மறைந்த மாணவனின் கல்லூரியைச் சார்ந்த மாணவர்கள் பலர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையின் முன் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் போலீஸார் 20-க்கும் மேற்பட்டோர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மொதல்ல 'இந்த விஷயத்த' பண்ண மாட்டேன்னு சத்தியம் பண்ணி 'எழுதி' கொடுங்க...! 'அப்போ தான் அட்மிஷன்...' - அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி..!
- 'கல்யாணம் ஆன தன் மகளுக்கு...' 'மணமகன்' தேவை விளம்பரம்...! 'யாரு' இந்த வேலைய பார்த்தது...? - கடைசியில் தெரிய வந்த 'அதிர்ச்சி' உண்மை...!
- 'நாளைக்கு உனக்கும் வயசாகும் டா, வேண்டாம் பா'... 'பெற்ற தாய் என்றும் பாராமல் மகன் செய்த கொடூரம்'... நெகிழவைத்த காவல்துறை!
- ‘ஆத்தீ எவ்வளவு பெருசு..!’.. கிரிக்கெட் விளையாடிய இடத்தில் கிடந்த வெடிகுண்டு.. திருவள்ளூர் அருகே அதிர்ச்சி..!
- 'இப்ப நான் என்ன செஞ்சுட்டு இருக்கேன் தெரியுமா?'.. “சொன்னதும் திக்குமுக்காடி போயிட்டாங்க!”.. தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்.. சினிமாவுக்கு சென்ற தம்பதியால் அழகாக மாறிய ‘வாழ்க்கை’.. வைரல் பதிவு!
- அரசியலுக்கு வர வலியுறுத்தி.. 'சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டு முன்... தீக்குளிப்பில் ஈடுபட்ட ரசிகர்! மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போலீஸார்!
- ‘இருவருக்கும் சண்டையா?.. தற்கொலையில் சந்தேகமா?.. எதுக்காக ஹோட்டல்ல தங்கினாங்க?’ - உயிரிழந்த நடிகை சித்ராவின் தந்தை பரபர பேட்டி .. வீடியோ!
- ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் புகழ் நடிகை ‘சித்ரா’ ஹோட்டலில் தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
- 'நீங்க சாப்பிட்டு வாங்க... நான் பாத்துக்குறேன்!'.. மொய் பணம் வசூல் செய்த உறவினரிடம் பேச்சு கொடுத்து... மர்ம நபர் செய்த 'பகீர்' காரியம்!.. திருமண வரவேற்பில் பரபரப்பு!
- “கொரோனா வந்துடுச்சு.. இனி பொழைக்க மாட்டேன்”.. கணவரிடம் இருந்து வந்த போன்.. தேடிச்சென்று ஷாக் ஆகி நின்ற போலீஸார்!