டெங்கு காய்ச்சலில் பலியான 'காதலி'... வேதனையில் 'கல்லூரி மாணவர்' எடுத்த கோர முடிவு... 'கோவையில்' நிகழ்ந்த 'அதிர்ச்சி சம்பவம்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் டெங்கு காய்ச்சலில் காதலி இறந்ததால் வேதனை அடைந்த கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை செல்வபுரம், சேத்துமாவாய்க்கால் பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவரின் மகன் வசந்த் கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2-வது ஆண்டு படித்து வந்தார்.
இவர் தன்னுடன் பள்ளியில் படித்த மாணவியை காதலித்து வந்தார். அவர்கள் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் வசந்தின் காதலி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகவில்லை. இதனால் வசந்த்தின் காதலி சிகிச்சை பலனின்றி கடந்த 2 மாதத்துக்கு முன்பு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் மனவேதனை அடைந்த வசந்த் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். சில நாட்கள் கழித்து தனது நண்பர்களின் வாட்ஸ்அப் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் தனது காதலி இறந்து விட்டதால், இந்த உலகில் வாழ எனக்கு விருப்பம் இல்லை. காதலி சென்ற இடத்துக்கே நான் செல்கிறேன் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனே வசந்தின் தந்தையின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.
அவர் தனது மகனை வீட்டில் தேடினார். ஆனால் அவர் வீட்டில் இல்லை. உடனே நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது சேத்துமாவாய்க்கால் அருகே ஒரு மரத்தில் வசந்த் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வசந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குறிப்பு : தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
மற்ற செய்திகள்
'சீனாவுல' இருக்க எங்க மாணவர்கள 'மீட்க' மாட்டோம்'... திட்டவட்டமாக 'அறிவித்த' நாடு... ஏன்? என்ன ஆச்சு?
தொடர்புடைய செய்திகள்
- பெண்களின் ‘உள்ளாடைகள்’, செருப்புகளைக் ‘குறிவைத்து’... கோவையை ‘பதறவைக்கும்’ சைக்கோ ‘திருடன்’...
- 'திருமணம் செய்து கொள்ள மறுத்ததால்'... 'கோவை பெண்ணுக்கு நடந்த கொடூரம்'... 'நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு'...
- பொங்கல் ‘விளையாட்டிற்காக’ நடந்த ‘கொடூரம்’... ‘பழிதீர்க்க’ சென்ற ‘நண்பர்கள்’... கோவையில் நடந்த ‘பதறவைக்கும்’ சம்பவம்...
- 'எஜமானை நோக்கி சீறி பாய்ந்த பாம்பு'...'ஒரு செகண்டில் நடந்த களேபரம்'... வைரலாகும் வீடியோ!
- ‘அனுமதியின்றி’ நடைப்பயிற்சி... கணவருடன் சென்ற ‘கோவை’ பெண்ணுக்கு நேர்ந்த ‘துயரம்’... ‘கதறிய’ நண்பர்கள்...
- பெண்கள் விடுதியில்... 7 அடி நீள நாகப் பாம்பு நுழைந்ததால் பரபரப்பு... அதிர்ந்த மாணவிகள்... வீடியோ!
- ‘வீட்டுக்கு வெளியே விளையாடிட்டு இருந்தா’.. ‘கடைசியா அப்போதான் பாத்தேன்’.. கண்ணீர் மல்க கூறிய தந்தை..!
- ஒரு தவறுக்கு எத்தனை 'தண்டனை' தருவீர்கள்... பள்ளி நிர்வாகத்தின் கெடுபிடியால் 'பறிபோன உயிர்'... குமுறும் 'பெற்றோர்'...
- தூக்குப் போட்டு தற்கொலை... மகளின் சாவில் சந்தேகம்... கணவன் மனைவி இடையே தகராறு.. ஆர்.டி.ஓ., விசாரணை...!
- பெட்ரோல் பங்கில்... பெண் ஊழியர்கள் டிரெஸ்ஸிங் ரூமில்... ரகசிய கேமரா... 3 பேர் கைது!