'மனைவியை பிரிந்து கல்லூரி மாணவியுடன் சென்ற திருமணமானவர்!'.. நண்பனுக்கு போன் செய்து கூறிய 'அதிர்ச்சி' தகவல்.. நேரில் சென்று பார்த்தபோது நடந்த 'கோரம்!'
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்தவர் தாமஸ் (வயது 26). கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணமான இவருடைய மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார். தாமஸ் வேலைபார்த்த ஓட்டல் அருகில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்த அமீர் என்பவரின் மகள் ரிஸ்வானா (19).
தனியார் கல்லூரியில் படித்து வந்த ரிஸ்வானாவும் தாமசும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியே சென்ற ரிஸ்வானா மீண்டும் வீடு திரும்பாததால், இதுகுறித்து அமீர் கீழ்பென்னாத்தூரில் போலீஸாரிடத்தில் புகார் அளித்தார். இதனிடையே தாமஸ், ரிஸ்வானாவுடன் வீட்டை விட்டு வெளியேறியது பற்றி, தனது நண்பருடன் பகிர்ந்ததுடன், இது குறித்து இரண்டு வீட்டாருக்கும் தெரிந்தால் பிரச்சினை ஆகும் என்று பயந்து கத்தாழம்பட்டு புதூரில் உள்ள சுடுகாட்டில் இருந்தபடி விஷம் அருந்தியதாகத் தெரிவித்துள்ளார்.
அதை அவர் போலீஸாருக்கு தெரிவித்ததை அடுத்து அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு மயங்கிய நிலையில் இருந்த தாமஸ், ரிஸ்வானா ஆகியோரை மீட்டு மருத்துவமனை அழைத்துச் சென்றபோது, டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து அவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இதனை அடுத்து 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டதுடன், கீழ்பென்னாத்தூர் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அம்மா வீடு 4 நாளா திறக்கவே இல்ல'... 'மகள் கதவை உடைத்து பார்த்தபோது... 'அதிர்ச்சியில் ஆடிப்போன ஊர்மக்கள்!'...
- 'கனவில் வந்த மாமியார், மாமனாரால்'... '6 வயது மகளை'... 'பெண் செய்த உறையவைக்கும் காரியம்'... 'வெளிவந்த அதிர்ச்சி வாக்குமூலம்'...
- 'கல்யாணத்துக்கு அப்புறம் கூட அப்பா அம்மா ஏத்துக்கல!'... கலங்கிய இளம் தம்பதி!.. தனித்தனி அறையில்... மனதை உலுக்கும் கோரம்!
- 'என் லைன்ல உங்க அப்பா குறுக்க வராரு'...'தாயின் கோர திட்டத்திற்கு துணை போன மகன்'...நெஞ்சை நொறுக்கும் சம்பவம்!
- திருவண்ணாமலையில் குகைக்குள் பதுங்கியிருந்த ‘சீன நபர்’.. ‘வனத்துறையினர் அதிரடி’.. பரபரப்பு சம்பவம்..!
- ‘காதல் திருமணம் செய்த இளைஞர்’... ‘ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர்’... ‘திரும்பியபோது நிகழ்ந்த கொடூரம்’
- 'ஆன்மிக நாட்டத்தால் திருவண்ணாமலை வந்து... சிவனடியாராக மாறிய அமெரிக்கர்!'... 'எரித்து கொலை செய்யப்பட்ட கொடூரம்!'... பதைபதைக்க வைக்கும் கோரம்!
- ‘அவன் சாவுல மர்மம் இருக்கு’.. அடக்கம் செய்த மகனின் உடலைத் தோண்டி பிரேத பரிசோதனை.. திருவண்ணாமலை அருகே பரபரப்பு..!
- 14 வருஷத்துக்கு முன் காணாமல் போன ‘தாய்’.. ‘உதவிய பாதிரியார்’.. அம்மாவை ‘கட்டிப்பிடித்து’ உருகிய பிள்ளைகள்.. நெகிழ்ச்சி சம்பவம்..!
- 'வீட்டுல பெண் குழந்தை இருக்காங்களா'?... 'அம்மா, பாட்டியோட ஒரு செல்ஃபி'... காத்திருக்கும் சர்ப்ரைஸ்!