'50' மாணவர்களுடன் தறிகெட்டு ஓடிய 'பேருந்து'... 'கட்டுப்பாட்டை' இழந்ததால் நிகழ்ந்த 'விபரீதம்'... 'அலறித்' துடித்த 'மாணவர்கள்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே தனியார் கல்லூரி பேருந்து கவிந்து விழுந்து நேரிட்ட விபத்தில் 50 மாணவ-மாணவியர் படுகாயமடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே அமைந்துள்ள தனியார் கல்லூரி ஒன்றில், சேத்தியாத்தோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் கல்லூரிப் பேருந்தில் தினசரி அழைத்துச் செல்லப்படுவது வழக்கம்.

அதன்படி இன்று காலை சேத்தியாத்தோப்பில் இருந்து ஸ்ரீமுஷ்ணம் நோக்கி கல்லூரி பேருந்து புறப்பட்டு வந்தது. இந்த பேருந்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இருந்தனர்.

இந்த பேருந்து சாஸ்தா வட்டம்- நாச்சியார்பேட்டைக்கும் இடைப்பட்ட பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக  ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 50 மாணவ-மாணவியரும் காயமடைந்தனர்.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், காயமடைந்த மாணவ-மாணவிகளை மீட்டு முதலுதவி அளித்தனர். பின்னர் 108 ஆம்புலன்சை வரவழைத்து அவர்களை மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேத்தியாத் தோப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

COLLEGE BUS, COLLIDE, CUDDALORE, 50 STUDENTS, ACCIDENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்