சபாஷ் போட வைத்த கோவை கலெக்டர்.. வெளியிட்ட ஒற்றை அறிவிப்பு.. குவியும் பாராட்டு

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா காலத்தில் வீட்டில் முடங்கியிருக்கும் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த கோவை ஆட்சியர் பட்டதாரி இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்தியாவின் எதிர்காலம் வகுப்பறையில்தான் உள்ளது என முன்னோர்கள் தெரிவித்தனர். ஆனால் இன்று மெட்ரிக் பள்ளி வகுப்பறைகளில் மட்டுமே இந்தியாவின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. தமிழ் வழிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் மட்டும் இன்னும் இருளிலேயே உள்ளது.

தமிழகத்தில் இன்று இரண்டு வழிகளில் கல்வி வழங்கப்படுகிறது. ஒன்று தமிழ்வழி,  மற்றொன்று தமிழ் மக்கள் பெரிதும் விரும்பும் ஆங்கில வழிக் கல்வி. தமிழ் வழிக் கல்வியை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் வழங்குகின்றன. முன்பை விட தமிழ் வழி கல்வியில் ஆங்கிலம் கற்க மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  எதிர்காலத்தை தீர்மானிக்கிற வருங்கால மாணவர்கள் ஆங்கிலம் தெரியாமல் சிக்கித் தவிப்பதை தடுக்க வேண்டும்.

திறமைகள் இருந்தும் ஆங்கிலம் தெரியாமல் புறக்கணிப்படும் வேதனையை பலரும் சமூகவலைதள பக்கங்களில் பகிர்வதை ஒரு செய்தியாக கடந்து சென்றுள்ளோம். ஆங்கில வழிக் கல்வியின் தரத்தை உயர்த்த ஆண்டுதோறும் அரசு பல கோடி ரூபாய் செலவு செய்கிறது. அரசு பள்ளிகளில்  தமிழ் வழி பயின்றாலும் ஆங்கிலமும் அங்கு கற்பிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் புலமை பெறுவது மட்டுமே, கல்வியின் நோக்கம் என இன்றைய பெற்றோர்கள் நினைக்கின்றனர். தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் உரிய பயிற்சி அளிக்கப்பட்டால் ஆங்கிலத்தில் புலமை பெறுவார்கள். கொரோனா போன்ற சூழலில் பள்ளி பாடத்தை மறக்கும் அளவிற்கு மாணவர்களின் கல்வித்திறன் மோசமாக உள்ளது. எனவே கல்வித்திறனோடு ஆங்கில பயிற்சியும் அவசியம் தேவைப்படுகிறது.

அந்தவகையில் மாணவர்களுக்கு எளிய முறையில் ஸ்போக்கன் ஆங்கிலம் வகுப்பு நடத்த இளையதலைமுறைக்கு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளார் கோவை ஆட்சியர் சமீரன். அந்த வாய்ப்பை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே அவரது எண்ணமாக உள்ளது. கோவை ஆட்சியரின் சமூகவலைதள பக்கத்தில் 'ஸ்போக்கன் இங்கிலீஷில் ஆசிரியர்களின் திறமையை வளர்த்து, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவ குழந்தைகளின் வாழ்க்கையை மாற்றுங்கள்' என குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய அறிவிப்பு

1. 21 வயது அதற்கு மேற்பட்டோராக இருக்க வேண்டும்
2. ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி நன்கு படிக்க, எழுத தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்
3. சொந்தமாக ஸ்மார்ட் போன் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்

அரிய புற்றுநோய் ஒரு பக்கம்.... இந்த இடத்தில் இப்படி ஒரு ட்விஸ்டா.. அதிர்ந்த அமெரிக்க பெண்!

என்ன ஒரு புத்திசாலித்தனம்.. கூகுள் பே மூலம் வழிபறி.. நவீன டெக்னாலஜி திருடர்களுக்கு மறக்க முடியாத பரிசு

COIMBATORE COLLECTOR, CONDUCT SPOKEN ENGLISH CLASS FOR STUDENTS

மற்ற செய்திகள்