தனி நபரின் காலில் விழுந்து ‘மன்னிப்பு’ கேட்ட விஏஓ உதவியாளர்.. கோவையில் நடந்த அதிர்ச்சி.. கலெக்டர் அதிரடி உத்தரவு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அன்னூரை அடுத்த ஒட்டர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால்சாமி. இவர் தனது சொத்து விவரங்களை சரிபார்ப்பதற்காக விஏஓ கலைச்செல்வியை அணுகியுள்ளார். அப்போது ஆவணங்கள் சரியில்லை என்றும், சரியான ஆவணங்களை தருமாறும் விஏஓ கூறியுள்ளார். இதனால் கோபால்சாமிக்கும், விஏஓ கலைச்செல்விக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அந்த சமயம் அருகில் இருந்த விஏஓ-ன் உதவியாளர் முத்துசாமி, இதனை தடுக்க முயன்றுள்ளார். அப்போது கோபால்சாமி, பட்டியலினத்தைச் சேர்ந்த முத்துசாமியின் சாதியை சொல்லி திட்டியதாகவும், பொய் குற்றச்சாட்டை கூறி வேலையை விட்டு நீக்கி விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த முத்துசாமி, கோபால்சாமியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறி அழுந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணை நடத்த கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். மேலும் காவல் துறையினரும் வழக்குப்பதிவு செய்து தெளிவான அறிக்கை சமர்ப்பிக்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்