'எங்க ஊருக்கு வர யோசிப்பாங்க'...'ஆனா இந்த மவராசன் வந்தான்'...'இளம் மருத்துவருக்கு நேர்ந்த பரிதாபம்'...அதிர்ந்து நிற்கும் கோவை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்யாருமே செல்ல தயங்கும் அடர்ந்த மலை பகுதியில் உள்ள கிராமத்தில். 3 வ்ருடங்கள் தங்கி சேவை செய்த இளம் மருத்துவரின் மறைவு கோவை மக்களை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.
கோவை மாவட்டம் சிறுமுகை ரேயான் நகரைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் வி.ஜெயமோகன். பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற ஜெயமோகன், மருத்துவம் படித்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என சிறு வயது முதலே ஆர்வமாக இருந்துள்ளார். அதே தாகத்துடன் மருத்துவம் படித்த அவர், தனது படிப்பை முடிந்த பின்பு, பல பெரிய மருத்துவமனைகளில் இருந்து வந்த வாய்ப்புகளை எல்லாம் உதறி விட்டு வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படும் மக்களுக்காக உழைக்க முடிவெடுத்தார்.
அதற்கு அவர் தேர்ந்தெடுத்த இடம் தான் தெங்குமரஹாடா மலை கிராமம். சுமார் 5 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த கிராமத்திற்கு செல்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. காரணம் அந்த கிராமத்தை சுற்றி ஓடும் மாயாறு தான். தெங்குமரஹாடா கிராமத்திற்கு செல்வதற்கு மாயாறு மூலமாக பரிசலில் சென்று பின்பு அந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும். இதன்காரணமாகவே யாரும் இங்கு பணி செய்ய வருவதில்லை. ஆனால் இந்த கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனது பணியை தொடங்கிய ஜெயமோகன், கடந்த 3 ஆண்டுகளாக இங்கு பணி செய்து வந்துள்ளார்.
இரவு, பகல் என பாராமல் சிகிச்சை அளித்து வந்த அவர், அந்த கிராம மக்களில் ஒருவராகவே மாறி போனார். இந்நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஜெயமோகன், கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்தசூழ்நிலையில் மகன் இறந்த துக்கம் தாளாமல் ஜெயமோகனின் தாய் ஜோதி, விஷமருந்திவிட்டார். மயங்கிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எந்த வித பிரதி பலனும் பாராமல் மருத்துவம் என்பது சேவை செய்ய மட்டும் தான் என, தனது இளம் வயதில் வாழ்ந்து காட்டிய ஜெயமோகனின் மறைவு தெங்குமரஹாடா மலை கிராம மக்களை மட்டுமல்லாது, கோவை மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துல பக்க விளைவுகள் அதிகம்...' 'இதயம் முழுக்க விஷம் ஏறியிருக்கு...' பிரபல டாக்டரின் ஆய்வு முடிவு...
- சாப்பாடு கொடுத்த ‘சமூக ஆர்வலருக்கு’ கொரோனா தொற்று.. ‘கோவையில்’ 40 போலீசாருக்கு தீவிர பரிசோதனை..!
- 'ஊரடங்கை' நீக்குனதுக்கு அப்பறமும்.. மக்கள் இத 'கண்டிப்பா' ஃபாலோ பண்ணியே ஆகணும்.. மருத்துவர் அறிவுறுத்தல்..!
- 'காரை வீடாக்கிய டாக்டர்...' 'ஃபேமிலி கூட வீடியோ கால் பண்ணி பேசுறேன்...' மனைவி, குழந்தைக்கு கொரோனா வரக்கூடாது என டாக்டர் எடுத்த முடிவு...!
- 'எங்க ஃபேமிலில யாருக்கும் பரவிடக் கூடாது, அதான்...' அவங்களோட சப்போர்ட் தான் ரொம்ப முக்கியம்...' கண்கலங்கிய மருத்துவர்...!
- 'நான் கொரோனா வார்டுல வொர்க் பண்ணல...' 'டாக்டரை டார்ச்சர் பண்ணின பக்கத்துக்கு வீட்டுக்காரர்...' வைரலாகும் வீடியோ...!
- ‘9 மணிக்கு விளக்கு வச்சோம்’.. ‘அப்போ நிலாவை சுத்தி பெரிய வட்டம் தெரிஞ்சது’.. கோவையில் நடந்த அதிசயம்..! என்ன காரணம்..?
- 'ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க, என் குழந்தை தவிச்சுக்கிட்டு இருக்கும்...' 'பணத்துக்கு நான் எங்க போவேன், சிங்கிள் டீ வாங்கக்கூட...' மருத்துவர் செய்த நெகிழ்ச்சி காரியம்...!
- 'சென்னை டாக்டருக்கு கொரோனா...' 'விமான நிலைய பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தவர்...' தொடர்பில் இருந்தவர்களை கண்காணிக்கும் சுகாதாரத்துறை...!
- 'வீட்டு வாசல்ல நின்னு தான் என் குழந்தைய பார்த்தேன்!'... கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க... 2 வாரங்களாக குடும்பத்தை பிரிந்த மருத்துவர்!... மனதை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!