‘கேரளா போய்ட்டு வந்த பெண்’.. ‘திடீர் காய்ச்சல், தொண்டை வலி’.. கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பெண்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் இரண்டு பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த பன்னிமேடு எஸ்டேட் பங்களா டிவிசன் பகுதியை சேர்ந்தவர் கமலம் (58). இவர் அப்பகுதியில் உள்ள எஸ்டேட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்றுமுன்தினம் வால்பாறை திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை திடீரென உடல்நிலை சரியில்லாமல் கமலம் சோலையார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு கமலத்தை பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக மருத்துவர்கள் சந்தேகித்தனர்.
இதனால் கமலத்துக்கு பாதுகாப்பு கவச உடை அணிவித்து சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆர்.ஆர். தியேட்டர் சாலையை சேர்ந்தவர் கோபால். இவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.இவரது மகள் மகாலட்சுமி (22). இவர் கடந்த வாரம் ஹைதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு பொள்ளாச்சி திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் மகாலட்சுமிக்கு திடீர் காய்ச்சல், தொண்டை வலி ஏற்பட்டதால் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். அங்கு மகாலட்சுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கலாம் என சந்தேகித்தனர். இதனை அடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். கமலம் மற்றும் மகாலட்சுமியின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிவுகள் வந்த பிறகுதான் கொரோனா பாதிப்பு இருக்கிறதா என தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- போலீசாரின் 'கொரோனா' டான்ஸ்...! 'பொதுமக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில்...' வைரலாகும் கேரளா போலீஸ் படையின் நடனம்...!
- 'போட்ட பிளான் எல்லாத்தையும் சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே டீச்சர்'... வாட்ஸ்-அப்பில் ட்விஸ்ட் வைத்த ஆசிரியர்கள்!
- ஆண்களா, பெண்களா... ‘கொரோனாவால்’ அதிகம் பாதிக்கப்படுவது யார்?... எந்த ‘ரத்தவகை’ உள்ளவர்களை தாக்குகிறது?... ‘எய்ம்ஸ்’ இயக்குநர் விளக்கம்...
- ஐயோ... கொரோனா வைரஸா...? 'அப்போ இங்க எரிக்க முடியாதுங்க...' உலக சுகாதார நிறுவனம் வழங்கும் தெளிவான நெறிமுறைகள்...!
- கொரோனாவால் ‘மணமகன்’ ஊர் திரும்பாததால்... குடும்பத்தினர் எடுத்த ‘முடிவு’... ‘வியப்பில்’ ஆழ்த்தும் ‘திருமணம்!’...
- 'புதுச்சேரியில் மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் உறுதி'... 'அபுதாபியில் இருந்து திரும்பியபோது தொற்று'... 'தீவிர கண்காணிப்பு'!
- 'திருப்பூரில் வேலை பாத்துட்டு ஊருக்கு வந்தேன்'... 'ஒரே சளி, இருமல்'... தீவிர கண்காணிப்பில் இளம்பெண்!
- ‘கொரோனா’ கண்காணிப்பில் இருந்து ‘தப்பிய’ நபர்... ‘விபத்தில்’ சிக்கியதால் ‘பரபரப்பு’... உதவிய ‘மருத்துவர்கள்’ உட்பட ‘40 பேர்’ கண்காணிப்பு...
- 'விடாது துரத்திய 'கொரோனா'... 'பூட்டிய வீட்டுக்குள்ள தனியா இருக்கேன்'... பிரபல நடிகையின் சோக பதிவு!
- 'கொரோனா'வுக்கு எதிராக தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு!... வழிபாட்டுக்கு பின்... காத்திருந்த அதிர்ச்சி!... கதறிய பாதிரியார்!... பதைபதைக்க வைக்கும் கோரம்!