'2018-ல் நீதிபதியே வியந்து பாராட்டி அளித்த வெகுமதி!'.. '2020ல் அதிரடியாகக் கைது!'.. 'யார் இந்த பெண் போலீஸ் சுஜா!'.. 'இடையில் நடந்தது என்ன?'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிங்கநல்லூர் காவல்நிலையத்தில் நீதிமன்றம் தொடர்பான பணியை கவனித்து வந்தவர் சுவப்ன சுஜா. கோவை சிங்காநல்லூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்த‌ இவர்,  தமது பணியின்போது கொள்ளையடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் உள்ளிட்டவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்றும், உரியவர்களிடம் ஒப்படைக்கவில்லை என்றும் புகார்கள் எழுந்தது.

Advertising
Advertising

இதுகுறித்து சுஜாவிடம் இருந்து உரிய பதிலும் வரவில்லை. முன்னதாக 11 குற்ற வழக்குகளில் தொடர்புடைய 50 சவரன் நகைகளை போலீசார் மீட்டு அந்த நகைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் பணியை சுஜாவிடம் வழங்கியிருந்தனர். ஆனால் அந்த நகைகளை நீதிமன்றத்தில் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார் சுஜா. அதிகாரிகள் கேட்டதற்கு உயர் அதிகாரிகளின் பெயர்களை பயன்படுத்தி நழுவி வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து சிங்கநல்லூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சிவக்குமார் சுஜாவிடம் விசாரணை செய்து புதிய விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டார்.‌ அதன்பிறகும் சுஜா எந்த பதிலும் அளிக்காமல் நீண்ட விடுமுறையில் செல்ல, கடந்த பிப்ரவரி மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் சுஜாதா கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் நகைகளை காணவில்லை என்று புகார் அளிப்பவர்களிடம் நகைகளை ஒப்படைக்காமல், நகைகளை பெற்றுக்கொண்டதாக மட்டும் கையெழுத்து வாங்கிக்கொண்டு ஏமாற்றி வந்த சுஜா, யாராவது கேட்டால், “வழக்கு முடிகிற வரை நகைகள் காவல் நிலையத்தில்தான் இருக்கவேண்டும்” என்று சொல்லி அவர்களிடம் சமாளித்துள்ளார். ஆனால் நகைகளை காவல் நிலையத்திலும், அவர் முழுமையாக ஒப்படைக்காததாகத் தெரிகிறது.  இதனால் தனிப்படை அமைத்து விசாரித்து பின்னர் சுஜா கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள சுஜாவுக்கு, 2012 ஆம் ஆண்டில் நிலுவையில் இருந்த பழைய வழக்குகளில் 85 வழக்குகளுக்கான சாட்சிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்று அவ்வழக்குகளை முழுமையாக முடித்து வைத்துள்ளார் என்பதால் அவரை பாராட்டி 2018-ஆம் ஆண்டு நீதிபதி பரிசு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்