‘அழகி பட்டம்’! ‘கோவை மேயர் பதவிக்கு விருப்ப மனு’.. ஆன்லைனில் ஆபாசமாக சித்தரித்து அவதூறு..! சிக்கிய ஈரோடு இளைஞர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி அவதூறு பரப்பப்படுவதாக அழகி பட்டம் வென்ற பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கோவையை சேர்ந்தவர் சோனாலி பிரதீப். இவர் திருமணமான பெண்களுக்கான அழகி போட்டியில் ‘மிஸ் இந்தியா யுனிவர்ஸ்’ பட்டம் வென்றுள்ளார். இதனை அடுத்து அதிமுகவில் இணைந்த அவர் வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பாக மேயர் பதவியில் போட்டியிட விருப்பம் மனு அளித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சிலர் வெளியிட்டு வருவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனால் தான் மன உளைச்சலுக்கு ஆளாவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுதொடர்பாக ரகுபதி என்பவரை கைது செய்துள்ளனர். ரகுபதியிடம் நடத்திய விசாரணையில், அவர் ஈரோடு மாவட்டம் 20-வது வார்டு திமுக உறுப்பினர் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் ரகுபதி மீது பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

POLICE, COIMBATORE, WOMAN, SOCIALMEDIA, ABUSIVE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்