'மனச திடப்படுத்திகோங்க, உங்க மனைவி உங்கள விட்டு போய்ட்டாங்க...' 'கேட்ட அடுத்த செகண்ட்லயே...' - நெகிழ வைத்த தூய்மையான காதல்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் தன் மனைவி இறந்த செய்தி கேட்டு, கணவரும் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்போதுள்ள ஆண்களும் சரி, பெண்களும் சரி என்னதான் திருமணத்தை ஒரு பாரமாக சொல்லிக்கொண்டு வந்தாலும் பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து ஒருவர் பிரியும் நேரத்தில் மற்றொருவருக்கு ஏற்படும் வலி உலகத்தில் யாராலும் ஈடு செய்ய இயலாது. இந்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர்கள் தான், கோவை மாவட்டம் சுந்தராபுரம் ஹவுசிங் யூனிட் பேஸ்-1 பகுதியில் வசித்து வருபவர் 74 வயதான மணி மற்றும் 72 வயதான அவரது மனைவி சரோஜினி.
நமக்கு அவர்கள் வயதான முதியவர்கள் என்றாலும் அத்தம்பதிகளுக்கும் திருமணம் ஆனது முதல் அன்பு குறையாமல் ஒரு காதல் பறவைகளாகவே வலம் வந்துள்ளனர்.
இதில் துர்திஷ்டவசமாக மூதாட்டி சரோஜினி அவர்களுக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன் உடல்நிலையில் மந்தம் ஏற்பட்டுள்ளது. மேலும் உடல்நிலை சரில்லாத தன் மனைவியை மருத்துவமனையில் வைக்காமல் தன் கண்ணெதிரிலேயே கவனித்து வந்தார் முதியவர் மணி.
விதி வலியது என்னும் பழமொழிக்கேற்ப நேற்று இரவு சரோஜினியின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததுள்ளது. சுதாரித்துக்கொண்ட முதியவர் மணி, மனைவி சரோஜினியை மருத்துவமனை கொண்டு செல்வதற்குள் அவர் உயிரிழந்துள்ளார். மேலும் மனைவி உயிரிழந்ததை அறிந்த முதியவர் மணி, அதிர்ச்சி தாங்காமல் வீட்டிலேயே மயங்கியுள்ளார்.
பின்னர் தம்பதிகளின் அக்கம்பக்கத்தினர் முதியவர் மணியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர் முதியவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
வாழ்வின் பாதிவருடங்கள் சேர்ந்து வாழ்ந்த மனைவி தன்னை விட்டு பிரிவதை தாளாமல் மனைவியுடன் கணவனும் விண்ணுக்கு சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை மட்டுமல்லாமல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கணவரை சுட்டுக் கொன்றதுடன்.. ரூமையே தீவைத்து கொளுத்திய பெண்.. ஒரு கிராமத்தையே நடுங்கவைத்த 'பரபரப்பு' சம்பவம்!
- 'சுத்தியலால் மனைவியின் தலையில்'.. 'ஓங்கி அடித்துக் கொன்ற கணவர்!'... 'கூலாக' சொன்ன 'வியப்பில் ஆழ்த்தும்' காரணம்!
- பாலத்துக்கு அடியில கெடந்த ஒரு டெட்பாடி...! 'ஊர்ல 2 பேர் காணாம போயிருக்காங்க...' - கொலைக்கான முடிச்சுகள் அவிழ அவிழ...' - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...!
- 'திருமணம் ஆகி 9 மாசம் கூட ஆகல!'.. 'இரும்பு ஊதுகுழலை எடுத்து'.. 'கணவர் செய்த கொடூரம்'.. 'புதுப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்'!
- 'அம்மா உங்க புருஷன் உடல எடுக்க போறாங்க'... 'கதறி அழுத அடுத்த நொடி நடந்த சோகம்'... 'வியக்கவைத்த அன்யோன்யம்'... நெகிழ்ச்சி சம்பவம்!
- '7 வருஷமா லவ் பண்றோம் ஆனா அன்னிக்கு'... 'மருத்துவர் கொடுத்த பகீர் வாக்குமூலம்'... 'மாணவிக்கு நேர்ந்த கொடூரத்தால் உறைந்துநிற்கும் குடும்பம்!'...
- கணவரின் திடீர் செயலால் அதிர்ந்த மனைவி.. ‘சந்தேகத்தை கூகுளில் தேடியதுதான் காரணம்’ என்று வாக்குமூலம்!
- “அவங்க 2 பேரும் என் தங்கச்சிய அந்த மாதிரி ஃபோட்டோ எடுத்தது மட்டுமில்லாம”.. இளம் தம்பதி கொலை வழக்கில் ‘திகைப்பூட்டும்’ ட்விஸ்ட்!
- ‘காலிங் பெல் அடித்த பால் பாக்கெட் காரர்!’.. கதவைத் திறந்ததும் ‘கண்ட’ நடுங்கவைக்கும் காட்சி.. இளம் தம்பதிக்கு நேர்ந்த ‘மர்மம்’!
- “லவ் பண்ணிட்டு, இப்படி பண்ணிட்டா!”.. காதல் முறிந்த விரக்தியில் பேஸ்புக்கில் இன்ஜீனியர் பார்த்த வேலை!.. 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பறந்த ஆபாச போன் அழைப்புகள்!