'தடபுடல் அலங்காரம்'.. 'சிறப்பு பூஜை'.. இந்த ரணகளத்துலயுமா இப்படி? .. டாஸ்மாக் கடை மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தைத் தாண்டியுள்ள நிலையில், தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்த பிற இடங்களில் டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் இன்று போலீஸார் மற்றும் தன்னார்வலர்களின் காவல் உதவியுடன், தனிமனித இடைவெளிகள் கடைபிடிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகள் சென்னை நீங்கலாக தமிழ்நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ளன. இதனை பொருட்டு நேற்றையதினம் சமூக இடைவெளிகளை பின்பற்றுவதற்கு ஏதுவான ஏற்பாடுகளை டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் செய்தனர்.
ஆனால் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மட்டும் சிறப்பு பூஜைகள் செய்து, வாழைமரம், மாவிலைத் தோரணங்கள் கட்டப்பட்டு தடபுடலாக செய்யப்பட்ட ஏற்பாடுகள் புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் வைரலாகின. இதுபற்றி வருவாய்துறைக்குத் தகவல் போனதை அடுத்து பேரூர் தாசில்தார் ராதாகிருஷ்ணனின் உத்தரவின் பேரில், அந்த டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “டாஸ்மாக் கடைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடலாம். ஆனால் அலங்காரப்படுத்துவதை இந்த காலச் சூழ்நிலையில் ஏற்க முடியாது” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO : 'குடை' கொண்டு வந்தா தான் 'அது' கிடைக்கும்... 'அறிவித்த' மாவட்டம்... 'ஒத்திகை' பார்த்து தயாரான நபர்!
- தமிழகம்: சென்னையில் 'முதல்வர் பழனிசாமி' இல்லத்தில் 'பாதுகாப்பு பணியில்' ஈடுபட்டு வந்த 'பெண் காவலருக்கு கொரோனா'?
- 'மூணு' நாளைக்கு 'ஒண்ணு' தான்... தமிழகத்தில் 'மதுபானம்' வாங்க... 'அதிரடி' நிபந்தனைகள்!
- ‘கொரோனா அச்சத்திற்கு இடையே’... ‘மக்களை அதிர வைத்த சம்பவம்’... ‘ உறைய வைக்கும் வீடியோ!
- 'போர் மூளும் அபாயம்!'.. அறிக்கையை சமர்பித்த சீன அதிகாரிகள்... அதிர்ந்து போன அதிபர் ஜின்பிங்!.. வெளியான பரபரப்பு தகவல்!
- 'எப்போது பொது போக்குவரத்து தொடங்கப்படும்?’... ‘மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அளித்த புதிய தகவல்’!
- தமிழகத்தை உலுக்கும் கொரோனா!.. ஒரே நாளில் 771 பேருக்கு நோய் தொற்று!.. என்ன நடக்கிறது தமிழகத்தில்?
- ‘இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பின் நிலை என்ன?’... ‘பிரதமர் தலைமையில் ஆய்வு’... ‘வெளியான முக்கிய தகவல்’!
- 'பச்சை மண்டலத்துக்கு முன்னேறிய தமிழக மாவட்டம்'... '24 நாட்களுக்குப் பின் திரும்பவும் பாதிப்பு'... வெளியான கொரோனா பரவல் பின்னணி!
- 'சென்னையில் 300-ஐ தாண்டிய 3 பகுதிகள்'... 'கட்டுப்படுத்தப்பட்ட தெருக்கள் 357 ஆக உயர்வு'... 'ஆண்கள், பெண்கள் பாதிப்பு விபரம்'!