"NEET EXAM கொடுக்குற ப்ரஷர் தாங்காம மேலும் ஒரு மாணவி!.. ரொம்ப கஷ்டமா இருக்கு!" - ட்விட்டரில் கனிமொழி கோரிக்கை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவை (COIMBATORE) ஆர்.எஸ்.புரம் பகுதியில் வசித்து வரும் ரவிச்சந்திரன் என்பவரது மகளும் மாணவியுமான 19 வயதான சுபஸ்ரீ (SUBASHREE) கடந்த 2 ஆண்டுகளாக நீட் (NEET EXAM) தேர்வுக்காக பயிற்சி மையத்தில் பயின்று வந்த நிலையில், தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

முனதாக கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீட் தேர்வுகள் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீட் தேர்வுக்காக தயாராகி வந்த மாணவி சுபஸ்ரீ, தேர்வு அழுத்தம் காரணமாக  தற்கொலை செய்துகொண்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடக்கியுள்ளனர்.

இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி (KANIMOZHI) ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், "நீட் தேர்வு அளிக்கும் மன அழுத்தம் தாங்காமல்,மேலும் ஒரு கோவை மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. கொரோனா காரணமாக, இந்த ஆண்டாவது மத்திய

அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" என்று பதிவு செய்துள்ளார். 

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்