கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு.. ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது பாய்ந்தது 'குண்டாஸ்‘!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவையில் தனியார் பள்ளியில் பயின்று வந்த 17 வயது மாணவி ஒருவர் கடந்த நவம்பர் மாதம் 11-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் போலீஸ் புகார் அளித்தனர். போலீஸ் விசாரணையில் அந்த மாணவி படித்த பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் கொடுத்த பாலியல் துன்புறுத்தலே காரணம் எனத் தெரிய வந்தது.

Advertising
>
Advertising

அந்த இயற்பியல் ஆசிரியரால் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்துள்ள அந்த மாணவி தற்கொலைக்கு முன்னர் கடிதம் எழுதிவைத்து இருந்துள்ளார். ஆசிரியர் குறித்து அந்த மாணவி பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்தப் பயனும் இல்லாததால் மன உளைச்சலால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்குத் தூண்டுதல், போக்சோ சட்டம் உள்ளிட்ட 3 வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீஸார் கைது செய்தனர். அதே வேளையில் அந்தப் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் தலைமறைவானார். அவரைத் தேடி வந்த போலீஸார் கடந்த நவம்பர் 14-ம் தேதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பெங்களூருவில் கைது செய்தனர்.

பள்ளியின் முதல்வர் கோவை மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்பட்டார். இயற்பியல் ஆசிரியர் மீது போக்சோ சட்டம் பதியப்பட்டு சிறையில் இருந்த சூழலில் தற்போது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. குண்டர் சட்டத்தில் சிறையில் இருப்பதால் அந்த ஆசிரியரால் அடுத்த ஓராண்டுக்கு எவ்வித காரணங்களாலும் சிறையை விட்டு வெளியே வரவே முடியாது.

SCHOOLSTUDENT, COIMBATORE, SCHOOL TEACHER MITHUN, GUNDAS ACT, குண்டர் சட்டம், கோவை பாலியல் விவகாரம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்