திருமண அழைப்பிதழில்... தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்த ரஜினி ரசிகர்!.. வைரல் இன்விடேஷன்... 'இப்ப இல்லன்னா எப்பவும் இல்லை'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் தன் திருமணத்துக்காக, ரஜினி புகைப்படத்துடன் "இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லை" என்ற வாசகத்துடன் கூடிய அழைப்பிதழை அச்சிட்டு வழங்கி வருகிறார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக பல ஆண்டுகளாகக் கூறி வருகிறார். ரசிகர்களும் ஆதரவாளர்களும் ரஜினி எப்போது கட்சியைத் தொடங்குவார் என்று ஆர்வத்துடன் காத்துக் கிடக்கின்றனர்.
இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த ரஜினி மன்ற நிர்வாகி ராமச்சந்திரன் என்பவர் தன் திருமணத்துக்காக, ரஜினிகாந்த் புகைப்படங்களுடன் அழைப்பிதழ் அச்சடித்துள்ளார்.
அதில், "இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லை... நாமின்றி வேறுயாருமில்ல" போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. தற்போது, இந்த அழைப்பிதழை ரஜினி ரசிகர்கள் மற்றும் உறவினர்களுக்கு வழங்கி வருகிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தொடங்கப்படுவது குறித்து ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதனால், ரஜினி ரசிகர்கள் சோர்வடைந்துள்ள நிலையில், அரசியல் வசனங்களுடன் அச்சடிக்கப்பட்டுள்ள இந்த திருமண அழைப்பிதழ் ரசிகர்கள் மத்தியில் சற்று உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்சி தொடங்கும் அறிவிப்பை ரஜினிகாந்த் விரைவில் வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், இது போன்ற வித்தியாசமான முறையில் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'என்கிட்ட கொடுத்த அந்த வாக்க தவறிட்டார்...' 'ஒரே வீடு தான், ஆனா ரெண்டு வாழ்க்கை...' - விவாகரத்திற்கு சொன்ன 'வினோத' காரணம்...!
- வரலாற்று சாதனை!.. நியூசிலாந்து பொதுத் தேர்தலில்... பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் பிரம்மாண்ட வெற்றி!.. சாத்தியமானது எப்படி?
- 2021 சட்டமன்ற தேர்தல்... பாஜக நிலைப்பாடு 'இது' தான்!.. தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி பரபரப்பு தகவல்!
- மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு!.. தனித்து போட்டியா?.. கூட்டணியா?.. வெளியான பரபரப்பு தகவல்!
- "எனக்கு அப்படி என்ன வயசாயிடுச்சுனு நினைக்கிறீங்க?.. அழகான பெண்களை முத்தமிடுவேன்!".. தேர்தல் பிரசாரத்தில்... அதிபர் டிரம்ப் தெறிக்கவிட்ட 'ரொமான்ஸ்'!
- சீமான் 'இந்த' தொகுதியில் போட்டியா?.. தனித்து நிற்கும் நாம் தமிழர் கட்சி... தேர்தல் வியூகம் என்ன?.. வெளியான பரபரப்பு தகவல்!
- "திருமணக் கனவால் நம்பி பேசிய பெண்கள்!"... "ஆசை வார்த்தை கூறி".. மேட்ரிமோனி மூலமாக 'இளைஞர்' செய்த 'நூதன மோசடி'!
- “கர்ப்பத்தை கலைக்கச் சொன்ன கணவர்!”.. சந்தேகப்பட்டு 'செக்' பண்ணிய மனைவிக்கு காத்திருந்த 'ஷாக்'! திருச்சியில் பரபரப்பு!
- 'காதலனுக்கு ஊர்ல கல்யாணம்...' 'போன் பண்ணினா ரெஸ்பான்ஸ் இல்ல...' 'நொறுங்கி போன காதலி...' 'நேரா காதலனோட ஊருக்கு வந்து...' - திருப்பத்துக்கு மேல் திருப்பம்...!
- “யாராச்சும் தாய்மொழியில் பேசுனா தெறிச்சு ஓடும் பெண்!”.. காரணம் ‘பிரிட்டிஷ் வரலாற்றில்’ முதல் முதலில் ‘இதை செஞ்சதுதான்!’