'எங்களுக்கு அவன் ஒரே புள்ள'... 'பரிதாபமாக சிக்கி கொண்ட பி.டெக் மாணவன்'... பரிதவிப்பில் பெற்றோர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புராஜக்ட் செய்வதற்காக மலேசியா சென்ற என்ஜினீயரிங் மாணவன் தற்போது அங்கு சிக்கி இருப்பது அவர்களது பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை சங்கனூர் ரோடு தெய்வநாயகி நகரை சேர்ந்தவர் முத்துராமன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவருடைய மனைவி கல்பனா. இவர்களின் ஒரே மகன் முகேஷ் வைத்யா. இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் (மெக்கானிகல்) இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இறுதி ஆண்டு என்பதால் கடைசி 2 மாதம் புராஜக்ட் செய்ய வேண்டும்.
இதற்காக முகேஷ் வைத்யா கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி மலேசியா சென்றார். அங்குள்ள பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டு, புராஜக்ட் வேலைகளில் முகேஷ் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தார். இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர், அங்கிருந்து இந்தியா வர முயற்சி செய்தார். ஆனால் அவர் கோவை வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து முகேஷ் வைத்யாவின் பெற்றோர் கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணியை நேற்றுக்காலை சந்தித்து தங்கள் மகனை மீட்டு வர உதவி செய்யுமாறு கோரி மனு கொடுத்தனர். அதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ''மேற்படிப்புக்காக மலேசியா சென்ற எங்கள் மகன் கொரோனா வைரஸ் பீதி காரணமாக அங்கு சிக்கிக்கொண்டுள்ளார். அங்கிருந்து இந்தியா வரும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. தற்போது எங்கள் மகன் மலேசியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் பராமரிப்பில் உள்ளார்.
எனவே எங்கள் மகன் உள்பட அனைவரையும் மலேசியாவில் இருந்து மீட்டு இந்தியா அழைத்து வர உதவி செய்ய வேண்டும். இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மனுக்கள் அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- குடும்ப அட்டைதாரர்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டட மற்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு ‘நிவாரணம்’... முதலமைச்சர் ‘அறிவிப்பு’... விவரங்கள் உள்ளே...
- 'இப்போ தான் நிம்மதியா வீட்டுக்கு போனோம்'...'மீண்டும் பூதாகரமாக வெடித்த காய்ச்சல்'...78 பேர் பாதிப்பு!
- '4 நாட்களில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று!!'... 'வைரஸ் தீவிரமடையுது... அத ஒழிக்க ஒரே வழி தான் இருக்கு!'... உலக சுகாதார அமைப்பு காட்டம்!
- ‘கைதட்டல் வீடியோவை பதிவிட்ட சேவாக்’... ‘ட்விட்டரில் கிளம்பிய பாராட்டும், எதிர்ப்பும்’!
- ‘கொரோனா’ பாதித்தவர்களில் ‘80 சதவீதம்’ பேருக்கு... வெளியாகியுள்ள ‘ஆறுதலான’ செய்தி... ஆனாலும் ‘இது’ அவசியம்...
- 'லாக் டவுன் மட்டுமே தீர்வாகாது’... ‘இதையும் சேர்த்து கண்டிப்பா பண்ணனும்'... 'கொரோனாவை கட்டுப்படுத்த அறிவுரை சொன்ன'... WHO எமெர்ஜென்சி நிபுணர்!
- 'தனிமைப்படுத்தப்பட்ட வீடு... உள்ளே நுழையாதே!'... சென்னை மாநகராட்சியின் இந்த ஸ்டிக்கர் சொல்வது என்ன!?
- ‘கொரோனாவால வேலை போச்சா’..‘கவலைப்படாதீங்க எங்க கம்பெனிக்கு வாங்க, நல்ல சம்பளம் தாரோம்’.. பிரபல நிறுவனம் அசத்தல்..!
- ‘கொரோனா’ அச்சுறுத்தலால்... வீட்டிலிருந்து ‘வேலை’ செய்பவர்களுக்காக... ‘சிறப்பு’ ஆஃபரை அறிவித்துள்ள ‘பிரபல’ நிறுவனம்...
- ‘இன்னும் சீரியஸாகவே எடுத்துக்க மாட்டேங்குறாங்க’... ‘வேதனை தெரிவித்த பிரதமர் மோடி’!