'இந்த ஊசியின் விலை 16 கோடி'... 'குழந்தைக்கு வந்துள்ள வித்தியாசமான நோய்'... பரிதவித்து நிற்கும் கோயம்புத்தூர் தம்பதி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அமெரிக்காவில் கிடைக்கும் இந்த ஊசியின் விலை இந்திய மதிப்பில் 16 கோடி ரூபாய் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மும்பை குழந்தை டீரா காமத் முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அந்த நோயிற்கான தடுப்பூசியைப் பெற டீராவின் பெற்றோர் எவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்தினார்கள் என்பதை நம்மில் பெரும்பாலானோர் அறிந்திருப்பார்கள். தற்போது அப்படி ஒரு போராட்டத்தைத் தான் கோயம்புத்தூரைச் சேர்ந்த தம்பதியர் நடத்தி வருகிறார்கள்.
கோவை போத்தனூர் அம்மன்நகர் 3-வது வீதியைச் சேர்ந்த தம்பதி அப்துல்லா - ஆயிஷா. அப்துல்லா பால் பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இவரின் 8 மாத பெண் குழந்தை ஸீஹா ஜைனப். இந்த குழந்தைக்கு எஸ்.எம்.ஏ எனப்படும் அரிய வகை மரபணு நோயின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகக் குழந்தை ஒரு வருடம் மட்டுமே உயிருடன் இருக்க வாய்ப்பு எனவும், அதற்குள் குழந்தையைக் காப்பாற்றக் குழந்தையின் உடலில் மரபணு ஊசி செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மரபணு ஊசி செலுத்தினால் மட்டுமே குழந்தை பிழைக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் அமெரிக்காவில் கிடைக்கும் இந்த ஊசியின் விலை இந்திய மதிப்பில் 16 கோடி ரூபாய் என்பது தான் அதிர்ச்சியின் உச்சம். அமெரிக்காவிலிருந்து ஊசி மருந்தை இந்தியாவிற்குக் கொண்டு வந்து குழந்தைக்குச் செலுத்தினால் மட்டுமே குழந்தை பிழைக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.
8 மாத பெண் குழந்தையைக் காப்பாற்ற அந்த பெற்றோர் போராடி வரும் நிலையில், 16 கோடி ரூபாய் தொகையை எப்படிச் சேர்ப்பது எனத் தெரியாமல் பெற்றோர்கள் தவித்து வருகின்றனர். தன்னார்வ அமைப்புகள் மூலம் நிதியுதவியைக் கேட்டு வரும் பெற்றோர் மத்திய, மாநில அரசுகள் தங்களுக்கு மருத்து கிடைக்க உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குழந்தையைக் காப்பாற்ற அரசே இந்த மரபணு நோய்க்கான மருத்தை வாங்கி கொடுக்க வேண்டும் எனவும் குழந்தையின் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையே மும்பை குழந்தை டீரா காமத்திற்கு இந்த ஊசி போட்ட பின்பு தற்போது குணமடைந்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள அந்த பெற்றோர், பெங்களூரைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் இதற்கான உதவி செய்வதாக கேள்விப்பட்டுப் பெயர் பதிவு செய்து நிதிக்காகக் காத்திருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்கள்.
அதே நேரத்தில் அந்த தன்னார்வ நிறுவனம் வருடத்திற்கு 100 குழந்தை என்ற வகையில், குலுக்கல் முறையில் குழந்தைகளைத் தேர்வு செய்து நிதி வழங்கி வருவதால் உதவி கிடைக்குமா என்பதும் கேள்விக் குறியாக உள்ளது. இந்நிலையில் குழந்தையைக் காப்பாற்ற நிதிக்காக பல்வேறு வகையில் முயற்சி செய்து காத்திருப்பதாகவும், அதே வேளையில் மத்திய, மாநில அரசுகளே அமெரிக்காவிலிருந்து இந்த நோய்க்கான மருந்தைக் கொள்முதல் செய்து கொடுத்து குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் எனவும் குழந்தையின் பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.
ஏற்கனவே முதல் குழந்தை இதே பாதிப்பால் உயிரிழந்து விட்ட நிலையில் இரண்டாவதாகப் பிறந்த பெண் குழந்தையைக் காப்பாற்றத் தம்பதியினர் அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். குழந்தையைக் காப்பாற்ற வழி இருந்தும் அதற்கான விலை எட்டமுடியாத உயரத்தில் இருப்பதால் பெற்றோர் என்ன செய்வது எனத் தெரியாமல் பரிதவித்து நிற்கிறார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கழுத்தில் ஸ்டெதஸ்கோப்’!.. ‘ஆனா பேச்ச பார்த்தா டாக்டர் மாதிரி தெரியலயே’.. இளைஞர் செஞ்ச காரியம்.. கையும் களவுமாக பிடித்த மக்கள்..!
- 'மனைவியின் தங்கச்சியையும் எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க'... 'அடம் பிடித்த மருமகன் செய்த வேலை'... நிலைகுலைந்து போன மாமனார், மாமியார்!
- 'வாக்கிங் போய் டயர்டா இருக்கு...' 'கொஞ்ச நேரம் குளக்கரையில ரெஸ்ட் எடுப்போம்...' - அப்படியே குளத்த திரும்பி பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!
- பிரியாணி 20 ரூபாய் .. அதுவும் இல்லையா?.. 'பசிக்குதா? எடுத்துக்குங்க!'.. ‘அந்த மனசுதான் சார் கடவுள்!’ - ‘நெகிழ வைக்கும்’ இளம்பெண்ணின் ‘வைரல்’ செயல்!
- ‘எப்படியாவது குழந்தையை காப்பாத்தணும்’!.. கண்முன் காத்திருந்த மிகப்பெரிய சவால்.. பரபரப்பு நிமிடங்கள்..!
- அரச மரத்துக்கு பட்டு வேட்டி கட்டி... வேப்ப மரத்துக்கு பட்டுப் புடவை உடுத்தி... மேள தாளத்துடன் டும் டும் டும்!.. திருமண விருந்து வைத்து அசத்திய பொதுமக்கள்!
- ஆண் நண்பருடன் ‘மனைவி’ தலைமறைவு.. வாடகைக்கு குடி வைத்ததால் வந்த வினை.. கணவர் கொடுத்த புகாரால் வெளிவந்த ‘பகீர்’ தகவல்..!
- லாக்டவுனை ‘கனக்கச்சிதமா’ யூஸ் பண்ணீட்டாங்க.. ‘6 மாசத்துல 5 லட்சம்’.. கோவையை கலக்கும் இளம்பெண்கள்..!
- ரூ.5-க்கு டிபன்... ரூ.10-க்கு சாப்பாடு... ரூ.30-க்கு மருத்துவம்!.. விடைபெற்றார் 'கியர்மேன்' சுப்ரமணியம்!.. கண்ணீரில் மூழ்கியது கோவை!.. யார் இவர்?
- '2 தடவ மிஸ்ஸிங்...' '3-வது தடவ மிஸ் ஆக சான்ஸே இல்ல...' 'போலீசாருக்கு கிடைத்த சின்ன க்ளூ...' - பைக் மூவிங்ல நடந்த வழிப்பறி...!