'இந்த பைக் வெறும் நாலே செகண்ட்ல...' 'எலன் மாஸ்க் கம்பெனியில இஞ்சினியர்...' - 'வேற லெவல்'ல பைக் செய்து மாஸ் காட்டிய நபர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையை சேர்ந்த மோகன்ராஜ் ராமசாமி தயாரித்த புதிய எலக்ட்ரிக் பைக்கை நேற்று (25-01-2021) கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி அறிமுகப்படுத்தி சந்தையில் தொடங்கி வைத்தார்.
கோவை மாவட்டத்த்தை சேர்ந்த மோகன்ராஜ் ராமசாமி என்பவர், எலக்ட்ரிக் கார் உற்பத்திக்கு பெயர் போன எலன் மாஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். மேலும், டெஸ்லாவின் எலக்ட்ரிக் பைக் தயாரிக்க மூளையாகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் அந்நிறுவனத்தில் இருந்து விலகிய மோகன்ராஜ், கடந்த 2012-ஆம் ஆண்டு ஸ்ரீவாரு மோட்டார்ஸ் லிமிடெட் என்ற பெயரில் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கினார். எலக்ட்ரிக் பைக் தயாரிப்பதுதான் மோகன்ராஜ் ராமசாமியின் முக்கிய நோக்கமாகும். கடந்த 2015 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட மோகன்ராஜ் ராமசாமியின் கனவு தற்போது நிறைவேறியுள்ளது.
ப்ரணா எலக்ட்ரிக் பைக் விற்பனையை கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி ஜனவரி 25 -ஆம் தேதி தொடங்கி வைத்துள்ளார்.
இந்த எலக்ட்ரிக் பைக் சுற்றுச்சூழலுக்கு எந்த மாசையும் ஏற்படுத்தாது எனவும், பயணிப்போரின் பாதுகாப்பாகவும், காற்று தடையை குறைக்கும் வகையில் ஏரோடைனமிக் வடிவமைப்பையும் கொண்டுள்ளது எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், மணிக்கு அதிகபட்சமாக 123 கி.மீ.,வேகத்தில் செல்லும். 4 விநாடியில் 60 கி.மீ.,வேகத்தை எட்டும் திறன் கொண்டது. பெட்ரோல் வாகனத்தை விட அதிக இழுவை திறன் கொண்டது. இந்த வாகனத்தில் கிளட்ச், கியர்கள் இல்லை என்பதால், பராமரிப்பு செலவு குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.
கோவையை தொடர்ந்து மதுரை, திருப்பூர், பாண்டிச்சேரி, கோழிக்கோடு மற்றும் திண்டுக்கல், பெங்களூரு நகரங்களில் ப்ரணா அறிமுகமாகவுள்ளது. வெளிமாநிலங்களிலும் விற்பனையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ப்ரணா வாகனத்தை ஆன்லைனிலும் பதிவு செய்யலாம். இந்த பைக்கின் விலை ரூ.2 லட்சம் முதல் 2.25 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘என்ன ரொம்ப நேரமா சத்தம் வந்துட்டே இருக்கு’!.. உடனே பைக்கை நிறுத்திய நபர்.. நூலிழையில் தப்பிய உயிர்.!
- ‘என்ன பாய்ஸ் ரெடியா’! சாப்பாடு போட்டியில் ஜெயிச்சா ‘Royal Enfield’ பைக் பரிசு.. அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட ஹோட்டல்..!
- தயவுசெஞ்சு பைக்கை எடுக்குமுன் இதை ‘செக்’ பண்ணுங்க.. நூலிழையில் உயிர்தப்பிய ‘மெக்கானிக்’.. உருக்கமான வேண்டுகோள்..!
- டீ குடிக்க பைக்கில் போன ‘மெக்கானிக்’.. பாதி வழியில் வண்டியை நிறுத்தி கண்ட ‘காட்சி’.. வெலவெலத்துப்போன மக்கள்..!
- 'போலிஸ் ஸ்டேசன்ல நிப்பாட்டியிருந்த பைக் எப்படி காணாம போகும்...? 'அதுக்கு பின்னாடி இருந்த மர்மம்...' - விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சி தகவல்...!
- சென்னை மக்களுக்கு ‘தித்திப்பான’ செய்தி.. மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட ‘அசத்தல்’ அறிவிப்பு..!
- ‘ரூம் போட்டு யோசிப்பாங்களோ’.. பைக்கை வெளியே நிறுத்தவே பயமா இருக்கே.. சென்னையில் நடந்த நூதன திருட்டு..!
- ‘சினிமா ஷூட்டிங்கிற்கு கார்’.. ‘பொறியியல் மாணவர்களுக்கு குட்டி ஹெலிகாப்டர்!’.. புல்லட் திருட்டில் பட்டம் பெற்ற ‘இன்ஜினியர்’.. மிரள வைக்கும் நெட்ர்வொர்க்!
- ‘புல்லட் பைக்’ தான் டார்கெட்.. சிக்கிய ‘சென்னை’ ஏரோநாட்டிகல் இன்ஜினீயர்.. விசாரணையில் வெளியான ‘பகீர்’ தகவல்..!
- ‘பல்சர் பைக்கில் வந்த வாலிபருக்கு நேர்ந்த சோகம்!’.. விபத்துக்குள்ளான பைக் மீது மோதிய அரசுப்பேருந்தால் ‘அடுத்து’ நடந்த பதறவைக்கும் சம்பவம்!