டிசம்பருக்கு பின் ‘செல்லாது’.. ‘கொலையில்’ முடிந்த ‘வதந்தி’.. ‘கோவையில்’ நடந்த அதிரவைக்கும் சம்பவம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆக்சிஸ் வங்கி மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவையில் ஈச்சனாரி அருகே கடந்த 3ஆம் தேதி 60 வயது ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விசாரணையில் அவர் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் சண்முகம் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்த போலீஸார் அவருடைய செல்ஃபோனை ஆய்வு செய்தபோது அவர் சதீஷ் என்பவரிடம் அடிக்கடி பேசியது தெரியவந்துள்ளது. பின்னர் இதுகுறித்து போலீஸார் சதீஷிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுந்தராபுரம் ஆக்சிஸ் வங்கிக் கிளையில் மேலாளராக வேலை செய்து வந்த சதீஷுக்கும், சண்முகத்திற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சதீஷ் டிசம்பர் மாதத்துடன் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற வதந்தியைப் பயன்படுத்திக்கொண்டு, உங்களுக்கு வேண்டுமென்றால் 15 முதல் 20 சதவிகித கமிஷனுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றித் தருகிறேன் என சண்முகத்திடம் கூறியுள்ளார். மேலும் சதீஷ் அதே வங்கிக் கிளையில் கணக்கு வைத்துள்ள  மதுசூதனன் என்பவரிடமிருந்து 4 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளையும் வாங்கி அவருக்கு கொடுத்துள்ளார்.

ஆனால் நீண்ட நாட்களாகியும் சண்முகம் உரிய பணத்தை கொடுக்காமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் மற்றும் மதுசூதனன், மகேஸ்வரன் என்பவருடன் இணைந்து, சண்முகத்தை கொலை செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின் கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

CRIME, MURDER, MONEY, COIMBATORE, MAN, AXIS, BANK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்