'சாம்பார்ல கிடந்த எலிக்குஞ்சு...' 'அந்த பார்சலோட ஹோட்டல்ல போய் கேட்டப்போ...' - தம்பிக்காக ஆப்பம் வாங்குனப்போ அக்காவுக்கு காத்திருந்த அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை அரசு மருத்துவமனைக்கு எதிரே இயங்கிக் கொண்டிருந்த ஹோட்டலில் இருந்து வாங்கிய சாம்பாரில் எலிகுஞ்சு இறந்து கிடந்ததால் வாடிக்கையாளர் கடும் அதிர்ச்சியடைந்தார்.
கோயம்பத்தூர் அரசு மருத்துவமனையில் உடுமலைப்பேட்டையை சேர்த்த திவ்யா என்பவரின் சகோதரர் கார்த்திகேயன் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் இன்று (22-11-2020) காலை திவ்யா மருத்துவமனைக்கு எதிரில் இயங்கிக் கொண்டிருந்த ஒரு உணவகத்தில் அவருக்கும், தம்பிக்கும் ஆப்பம், சாம்பார் ஆகியவற்றை பார்சல் செய்து வாங்கிக்கொண்டு சென்றுள்ளார்.
உடல் நலக்குறைவு ஏற்பட்ட தனது தம்பிக்கு அதை சாப்பிட கொடுத்துள்ளார். சாப்பிட்ட பின்னர் மீதி இருந்த சாம்பாரில் பார்த்த போது அதில் எலிக்குஞ்சு ஒன்று இறந்த நிலையில் இருந்ததைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இறந்த எலி கிடந்த சாம்பாருடன் ஹோட்டல் உரிமையாளரிடம் வந்து முறையிட்டுள்ளார். அப்போது உரிய பதில் அளிக்காமல் எலி இருந்த பார்சலை திருப்பி வாங்கி வைத்துள்ளார்.
இதையடுத்து கடைக்காரருடன் வாக்குவாதம் எற்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் சாம்பாரில் எலி கிடந்தது குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் உணவு பாதுகாப்பு உணவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஹோட்டலில் சோதனை மேற்கொண்டனர். சாம்பாரில் எலி கிடந்தது குறித்த புகார் வந்திருப்பதாகவும், விசாரணை நடப்பதாகவும், விசாரணை முடிந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- எலிக்கு தங்கப்பதக்கம்...! 'எத்தனையோ மக்களோட உயிர ஒரு எலி காப்பாத்திருக்கு...' இந்த விருது கிடைக்க முழு தகுதியும் எலிக்கு இருக்கு...!
- 'கொரோனா நெகட்டிவ்னு வந்த'... 'இவங்க எல்லாருக்கும் மறுபடி டெஸ்ட் பண்ணுங்க'... 'வெளியாகியுள்ள முக்கிய உத்தரவு!'...
- 'அறைக்கு வெளியே நின்ற 30 ஆண்கள்'... 'இளம்பெண்ணுக்கு அடுத்தடுத்து நேர்ந்த நடுங்கவைக்கும் சம்பவம்'... 'நாட்டையே உலுக்கியுள்ள பயங்கரம்'...
- VIDEO: “அம்மா இருக்கேன் கண்ணுங்களா”.. கொட்டும் மழையில் சிக்கிய குட்டி எலிகள்!.. உயிரைப் பணயம் வைத்த தாய் எலி!... நெகிழ வைக்கும் வீடியோ!
- 'ஹலோ...! இங்கெல்லாம் சாப்பிட முடியாதுங்க, கொரோனா வந்திடும்...' 'பார்சல் வேணா தரேன்...' ஆட்களை கூட்டிட்டு வந்து...' 'கடுப்பான கஸ்டமர் செய்த அதிர்ச்சி காரியம்...!
- 'ஒயின்ஷாப்பில் புகுந்து சரக்கடிச்ச எலிகள்...' 'மப்பு ஓவராகி எல்லாம் பயங்கர மட்டை...' எப்படி குடிச்சுதுங்குறது தான் மேட்டரே...!
- ‘அந்த ஜெயிலுக்கு மட்டும் அனுப்பாதீங்க’.. நீதிமன்றத்தில் வாதிட்ட ‘நீரவ் மோடி’.. அப்படி என்ன காரணம்..?
- "ஒரு நேரத்தில்.. ஒரே ஒருத்தர் மட்டும் சாப்பிடும் ஹோட்டல்!"... 'கொரோனாவுக்கு' எதிரான 'சமூக விலகலின்' உச்சகட்ட 'யோசனை'!.. 'தம்பதிக்கு' குவியும் 'பாராட்டுகள்'!
- ‘புற்றுநோய்’ பாதித்த பெண்ணின் கால் விரலை ‘ரத்தம்’ வர கடித்த எலி.. அரசு மருத்துவமனையில் நடந்த அவலம்..!
- ‘அடையாளம் தெரியாத அவரதான் தேடிட்டு இருக்கோம்’... ‘லாக்டவுனுக்கு’ முன்... ‘வாடிக்கையாளர்’ கொடுத்து சென்ற ‘வேறலெவல்’ இன்ப ‘அதிர்ச்சி’...