'விமானத்தில் வந்து இறங்கியதும் பதற்றமாக இருந்த நபர்'... 'எக்ஸ்ரேல கூட தெரியாது, ஆனா'... 'மலக்குடலுக்குள்' இருந்த தங்கம்'... அதிர்ந்துபோன அதிகாரிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தொழில்நுட்பம் வளர வளர மோசடி செய்பவர்களும் தங்களின் நுணுக்கங்களை மாற்றிக் கொண்டே செல்கிறார்கள். அதுபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது.

கோவை விமான நிலையத்திற்கு ஷார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா விமானம் கடந்த 1ம் தேதி வந்திறங்கியது. அதில் வந்த 5 பயணிகள் மீது மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை அழைத்து சோதனை செய்த அதிகாரிகள் முடிவு செய்தனர். அப்போது அதில் ஒருவர் பதற்றமாக இருந்ததைப் பார்த்த அதிகாரிகள் அவரிடம் மேற்கொண்ட சோதனையில், 324 கிராம் எடைகொண்ட தங்கத்தை 28 'கேப்சூல்கள்' வாயிலாக விழுங்கி கடத்தி வந்ததைக் கண்டறிந்தனர்.

இதனிடையே 5 பேரும் மலக்குடலில் 6.318 கிலோ எடைகொண்ட 'பேஸ்ட்' வடிவிலான தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. மலக்குடலிலும், விழுங்கப்பட்ட 'கேப்சூல்கள்' மூலமும் கடத்தி வரப்பட்ட தங்கத்தைப் பிரித்தெடுத்ததில் மொத்தம் ரூ.2.85 கோடி மதிப்பிலான 5.74 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதற்கு முன்னர் மலக்குடல், பைகள், மின்சார சாதனங்களில் மறைத்துவைத்துக் கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வந்த நிலையில், முதல்முறையாக கேப்சூல் வடிவில் விழுங்கி கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே விமான நிலையத்தில் உள்ள எக்ஸ்ரே உள்ளிட்ட கருவிகளால் கண்டறிய முடியாத இவ்வகை கடத்தலை, தீவிர சோதனைகள் மற்றும் விசாரணை மூலமாக மட்டுமே கண்டறிய முடியும். இந்த கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டவரைக் கண்டறியத் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்