'அந்த முகத்தில எப்போவுமே ஒரு சிரிப்பு இருக்கும்...' 'பிரிய மனமில்லாமல் கட்டியணைத்து, கண்ணீர் மல்க...' திருப்பூர் விபத்தில் பலியானவரின் நெகிழ்ச்சி வீடியோ... !

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கேரளா அரசின் சொகுசு பேருந்து மற்றும் கண்டெய்னர் லாரி திருப்பூர் அவிநாசி அருகே மோதிய விபத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். பேருந்தில் பயணித்த பொது மக்களில் ஒருவரான ஜோஃபி பால் என்பவரின் வீடியோ தற்போது இணையத்தில் பரவி கேரளா மக்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 20ம் தேதி அதிகாலையில் திருப்பூர் அவிநாசி நெடுஞ்சாலை அருகே கேரள மாநில போக்குவரத்து கழகத்தின் குளிர்சாதன பேருந்தின் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் சுமார் 20 பேர் உயிரிழந்தனர். இதில் இருந்த மீள முடியாத கேரள மக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ள வீடியோவால் மேலும் சோகத்தில் உள்ளனர்.

திருச்சூரைச் சேர்ந்த ஜோஃபி பால் என்பவரும் இந்த விபத்தில் உயிரிழந்தார். இவர், பெங்களூரில் உள்ள ஜோய் ஆலுகாஸ் நகைக் கடையின் மேலாளராகப் பணியாற்றி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவர் மைசூர் கிளையில் இருந்து பெங்களூருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மைசூரில் அவருடன் பணிபுரிந்த ஊழியர்கள் அவரைப் பிரிவதற்கு மனமில்லாமல், காலில் விழுந்தும் கட்டியணைத்தும், கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்துள்ள வீடியோ தான் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஜோஃபிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர் எனவும், அவர் தனது பழைய வீட்டை விற்றுவிட்டு, புதிய வீடு கட்டுவதற்கான திட்டத்துடன் இருந்ததாகவும் அவருடைய நண்பர்கள் தெரிவித்துள்ளனர். தனது குடும்பத்தினருடன் வேளாங்கண்ணி செல்ல வேண்டுமென்பது ஜோஃபியின் நீண்ட நாள் ஆசை எனவும் அதை நிறைவேற்றவே அந்த பேருந்தில் திருச்சூர் சென்றிருந்தார் என கூறப்படுகிறது.

அவரது நண்பர்கள், ஜோஃபி எப்போதும் சிரித்த முகத்துடன் தான் இருப்பார் எனவும், நல்ல ஆளுமைப் பண்பு கொண்டர் என கூறியதோடு மட்டும் அல்லாமல் தங்களை எல்லாம் அவருடைய குடும்ப உறுப்பினர் போலவும் நடத்தினார். அதனாலேயே, அனைத்து ஊழியர்களுக்கும் அவர் மீது தனிப்பாசமுண்டு  எனக் கூறி கண்கலங்கினர்.

இந்த வீடியோ தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

COIMBATOREACCIDENT

மற்ற செய்திகள்