'கோவையைக் குறிவைக்கும் கொரோனா?'.. நகைக்கடை பணியாளர்கள் 3 பேருக்கு தொற்று!.. தேடுதல் வேட்டையில் சுகாதாரத்துறை!.. பகீர் தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவையில் நகைக்கடை பணியாளர்கள் 100 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கோவையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், விமானத்தில் கோவை வருகிற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதேபோல் ரெயிலில் வருகிறவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் இ-பாஸ் இன்றி வாகனங்கள் மூலம் பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது.

கோவையில் கொரோனா தொற்று காரணமாக 255 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 164 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.  வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள், கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் வசித்த பகுதிகளில் உள்ளவர்கள் என மாவட்டம் முழுவதும் 18 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் கோவையில் இயங்கி வரும் நகைக்கடை ஒன்றில் சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தினர். அதில் பணியாளர்களில் 100 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதனையடுத்து இரு நாட்களாக கடைக்கு வந்து சென்ற வாடிக்கையாளர்கள், பணியாளர்களின் விபரங்களை சேகரிக்கும் முயற்சியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்