‘உங்க பெர்ஃபாமன்ஸ் சரியில்ல’... ‘வேலையைவிட்டு’... ‘நீக்கியதால் அதிர்ந்த ஊழியர்’... ‘விளக்கம் அளித்த பிரபல நிறுவனம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வேலை நீக்க திட்டத்தின் (Job cut plan) அடிப்படையிலேயே, ஊழியர் ஒருவர் நீக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, பிரபல காக்னிசென்ட் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பிரபல ஐடி நிறுவனமான காக்னிசென்ட்டில் பணிபுரிந்து வந்தவர் இளவரசன் ராஜா. சாஃப்ட்வேர் துறையில் 8 வருட அனுபவம் நிறைந்த இவர், ஐடி ஊழியர்களுக்கான, தமிழகம் மற்றும் மகாராஷ்டிராவில் பதிவுசெய்யப்பட்ட, ஊழியர்கள் நல சங்கமான FITE -யின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், இவர், கடந்த 5 மாதங்களாக, 17 முறை வாய்ப்புகள் கொடுத்திருந்தும், எந்தவொரு புராஜெக்ட்டையும், சரிவர செய்யாததால், காக்னிசென்ட் நிறுவனம்  அவரை பணியிலிருந்து நீக்குவதாக தெரிவித்தது. இதனால் அந்த ஊழியர் அதிர்ந்துபோயுள்ளார்.

இளவரசன் ராஜா, எந்தநேரத்திலும், எந்தவொரு புராஜெக்ட்டையும் எடுத்து, திறமையுடன் செயல்பட முடியும் என்று கூறியிருந்தநிலையில், காக்னிசென்ட் நிறுவனத்திற்கு எதிரான, ஐடி ஊழியர்கள் நல சங்க வேலைகளில் ஈடுபட்டு வந்ததால், வேண்டுமேன்றே அவரை பணிநீக்கம் செய்துள்ளது என்று FITE குற்றஞ்சாட்டியுள்ளது. இதையடுத்து, FITE, NDLF, UNITE சங்கங்கள், பாதிக்கப்பட்ட  ஊழியர்களுடன் இணைந்து, சென்னையில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை ஆணையரை அணுகியுள்ளது.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள காக்னிசென்ட் நிறுவனம், பணிநீக்கம் செய்யப்பட்ட அந்த ஊழியர், கடந்த 5 மாதங்களாக சரியான முறையில் பணிபுரியாதது (performance Grounds) மற்றும் வாடிக்கையாளரின் கருத்துகளின் (Client Feedback) அடிப்படையிலேயே அவர் நீக்கப்பட்டார் என்று விளக்கம் அளித்துள்ளது.

IT, EMPLOYEE, COGNIZANT, FITE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்