என்னடா இது.. அடுப்புல வைக்காமலே குக்கர்ல விசில் சத்தம் வருது.. திறந்து பார்த்தபோது... ஷாக் ஆன குடும்பம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடலூர்: அடுப்பில் வைக்காமல் சமையலறையில் வைத்திருந்த குக்கரில் இருந்து விசில் சத்தம் வந்துள்ளது. திறந்து பார்த்த குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்னடா இது.. அடுப்புல வைக்காமலே குக்கர்ல விசில் சத்தம் வருது.. திறந்து பார்த்தபோது... ஷாக் ஆன குடும்பம்
Advertising
>
Advertising

வீடுகளுக்கு வரும் விஷப் பிராணிகள்:

வன மிருகங்கள் தற்போது மனிதர்கள் வாழும் இடங்களுக்கு வந்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடும் விஷம் உள்ள பிராணிகளும் அடிக்கடி வீடுகளில் வந்து மனிதர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பாம்பு, தேள் உள்ளிட்ட விஷப் பிராணிகளும், பூச்சிகளும் சில சமயங்களில் ஆபத்துகளை உருவாக்குகின்றன.

cobra Snake in a cooking cooker in Cuddalore district

இந்த நிலையில், கடலூரில் வீட்டின் சமையல் அறையில் இருந்த குக்கர் ஒன்றில்  சுமார் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பழைய குக்கரில் இருந்து விசில் சத்தம்

கடலூர் மாவட்டம் கம்மியம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாரதி இளமாறன். இவருடைய வீட்டின் சமைய‌ல் அறையில் பாத்திரங்களை அடுக்கி வைத்திருந்த இடத்தில் இருந்து விசில் அடிப்பது போன்ற சத்தம் ஒன்று கேட்டுள்ளது. அங்கே அடுப்பில் வைக்காமல் கீழே வைக்கப்பட்டிருந்த ஒரு பழைய குக்கரில் இருந்து விசில் சத்தம் வந்துள்ளது. அது பாம்பு சத்தமாக இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் கருதியுள்ளனர். உடனடியாக பாம்பு பிடி வீரரான செல்வா என்பவவரை சீக்கிரமாக வர வைத்தனர்.

விரைந்து வந்த பாம்பு பிடி வித்தகர்:

தகவல் கேள்விப்பட்டு விரைந்து வந்த பாம்பு பிடி வித்தகரான செல்வா வீட்டில் உஷ் உஷ் என்று விசில் சத்தம் வந்த இடத்தை நோக்கிச் சென்றார். பாத்திரங்களுக்கு இடையே இருந்த குக்கருக்குள் இருந்து தான் வருகிறது என்பதனை உறுதி செய்தார். வீட்டில் இருந்த அந்த சமையல் குக்கரை திறந்து பார்த்த போது நல்ல பாம்பு ஒன்று தலையை தூக்கி உஷ் என்றது.

பாம்பு பிடிப்பதில் வல்லவர்:

இதனை பார்த்தபோது குடும்பத்தினர் மிரண்டு போயினர். பாம்பு பிடிப்பதில் வல்லவரான செல்வா குக்கரில் இருந்த சுமார் 4 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை அலேக்காக பிடித்து சென்றார். அந்த நல்ல பாம்பை பாதுகாப்பாக காப்புக் காட்டில் விட்டுள்ளார். சமையல் குக்கரில் நல்ல பாம்பு இருந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

COBRA, SNAKE, COOKER, CUDDALORE, நல்ல பாம்பு, குக்கர், கடலூர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்