'சொன்னதை செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...' 'நகைக் கடன் தள்ளுபடி...' - பணிகளை தொடங்கிய கூட்டுறவுத்துறை, விரைவில் தள்ளுபடி ரசீது...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஏழை எளிய மக்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள நகைக் கடன்களை தள்ளுபடி செய்யும் பணிகளை கூட்டுறவுத்துறை தொடங்கியுள்ளது. இதற்காக வங்கிகளில் உள்ள நகைக் கடன் விவரங்களை சேகரிக்கிறது. இதன் மூலம் சுமார் 17 லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள்.
கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழை கூலித் தொழிலாளர்களின் நலன் காத்திடும் வகையில் ரேசன் கடைகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது, இதைத் தவிர ரொக்கமாக ஆயிரம் ரூபாய் அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 26-ம் தேதி சட்ட பேரவையில் ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரை வைத்து பெற்ற நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்தார். இதற்கு அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பு தெரிவித்தனர். இந்நிலையில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அனைத்து மண்டல கூட்டுறவு வங்கிகளுக்கும் ஒரு சுற்றிக்கையை அனுப்பியுள்ளார். அதில், கூட்டுறவு வங்கிகளில் ஜனவரி 31-ம் தேதி வரை நிலுவையில் உள்ள நகைக் கடன் விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளார். இதன் மூலம் கூட்டுறவுத்துறை, நகைக் கடன் தள்ளுபடி செய்யும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீதுகள் விரைவில் உரியவர்களிடம் வழங்கப்படும் என்றும் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கூட்டுறவு வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு தள்ளுபடிக்கான ரசீது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நெருங்கும் சட்டமன்ற தேர்தல்... 'அதிமுக' வேட்பாளர் 'நேர்காணல்' குறித்து... 'தலைமை' வெளியிட்ட 'முக்கிய' அறிவிப்பு!
- 'வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசு...' - ஒப்புதல் அளித்த தமிழக ஆளுநர்...!
- தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்..? ஏபிபி நியூஸ், சி-வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவு வெளியீடு..!
- 'தமிழக' சட்டமன்ற தேர்தல்... உறுதியான 'அதிமுக' - 'பாமக' கூட்டணி!!... ஒதுக்கப்பட்ட 'தொகுதி'கள் எத்தனை??..
- 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி பாஸ்.. முதல்வர் பழனிசாமி ‘அதிரடி’ அறிவிப்பு..!
- அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது வரம்பு உயர்வு.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!
- ‘பரபரக்கும் தேர்தல் களம்’!.. முதல்வர், துணை முதல்வர் போட்டியிடும் தொகுதி என்ன..? விருப்ப மனு தாக்கல்..!
- 'இடைக்கால பட்ஜெட்'... 'குடும்ப தலைவர் விபத்தில் இறந்தால் ரூ.4 லட்சம்'... தமிழக அரசின் 'அம்மா காப்பீடு'!
- "'ஜெயலலிதா' பிறந்தநாளில்.. 'தீபம்' ஏற்றி 'உறுதிமொழி' எடுங்க..." 'முதல்வர்', 'துணை முதல்வர்' கூட்டாக 'வேண்டுகோள்'!!
- 'இது நூறு வருஷ கனவு...' 'காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு...' - அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வர்...!